உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துளு நாட்டு வரலாறு

21

கள் இதனை துளு நாட்டு வரலாறு 21 என் 'ஏழிமல' என்று அழைத்தனர். ழகரத்தை உச்சரிக்கத் தெரியாத மேல்நாட்டார் முதலியோர் இதனை'யய்முல்லை'(Yai Mullay) என்று கூறினார்கள். சிலர், ஏழில் மலையை எலிமலை என்று வழங்கினார்கள். வடமொழியாளர், எலிமலை பதை மூஷிகமலை என்று மொழி பெயர்த்துக் கொண்டு தங்கள் வழக்கம்போல "மூஷிக வம்சம்' என்னும் பெயருள்ள நூலை எழுதினார்கள். மூஷிக வம்சத்தில் ஏழில்மலையை யரசாண்ட பிற் கால அரசர்களைப் பற்றியும் அது சம்பந்தமான புராணக் கதைகளையும் எழுதி வைத்தனர். பிற்காலத்தில் வாணிகத்துக்காக வந்த போர்ச்சுகீசியர் இந்த மலையை எலிமலை என்றே கூறினார்கள். அவர்கள் 'மவுண்ட்-டி-எலி, (Monte D' Ele) என்று கூறினார்கள். அப்பெயர் பிற்காலத் தில் 'டெல்லி' (Delli) என்று குறுகிற்று. ஏழில்மலை, அரபிக்கடலில் 27 மைல் தூரம் வரையில் தெரிந்தது. வாஸ்கோ-டி-காமா என்னும் போர்ச்சுக் கீசியர் முதல் முதல் இந்தியாவுக்கு வந்த போது அவருக்குக் கடலில் முதல்முதலாகக் காணப் பட்ட இடம் இந்த மலையே. 1498 இல், ஏழில்மலை யைக் கடலில் இருந்து கண்ட அவர் தன் கப்பலைக் கண்ணனூருக்கு அருகில் செலுத்திக் கரை இறங் கினார். ஏழில்மலை கடற்கரைக்குக் கிழக்கே ஒரு மைல் தூரத்தில் இருக்கிறது. இங்குக் கடற்கொள்ளைக் காரர் இருந்தனர் என்று முற்காலத்துப் பிற் காலத்து அயல் நாட்டார் எழுதியிருக்கிறார்கள்