உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துளு நாட்டு வரலாறு

29

துளு நாட்டு வரலாறு 29 மான் நாடு (தகடூர்) முதலிய சிறுசிறு நாடுகளைச் சிற்றரசர்கள் அரசாண்டனர். ஆகவே, சேர சோழ பாண்டிய அரசர்களும் துளுநாட்டு அரசரும் வட கொங்குநாட்டைக் கைப்பற்றிக்கொள்ள அடிக்கடி போர் செய்துகொண் டிருந்தார்கள். அக்காலத்தில் வடகொங்குநாடு இவ்வரசர்களின் போர்க்களமாக இருந்தது. துளுநாட்டின் கிழக்கே(வடகொங்கு நாட்டுக்கு வடக்கே) கன்னட நாடு இருந்தது. அது அக் காலத்தில் சதகர்ணி யரசரின் தக்காணப் பேர ரசுக்கு உள்ளடங்கியிருந்தது. (சதகர்ணியரசருக் குச் சாதகர்ணி என்றும் சாதவாகனர் என்றும் நூற்றுவர் கன்னர் என்றும் பெயர்கள் வழங்கின.) துளுநாட்டின் வடக்கே மேற்குக் கடற்கரை யைச் சார்ந்திருந்த நாடுங்கூட அக்காலத்தில் சத கர்ணியரசரின் தக்காண இராச்சியத்துக் குட்பட் டிருந்தது. ஆனால், சாகர் என்னும் மேற்கு சத்ராப் அரசர்கள் அப்பகுதிகளைக் கைப்பற்றினார்கள். அவர்கள் கைப்பற்றிய அப்பகுதிகளைச் சதகர்ணி யரசர் போரிட்டு மீட்டுக்கொண்டனர். மறுபடியும் சத்ராப் அரசர் அப்பகுதியைக் கைப்பற்றினர். மீண்டும் அதைச் சதகர்ணியரசர் மீட்டுக்கொண்ட னர். இவ்வாறு அவ்வடபகுதி அடிக்கடி சத்ராப்- சதகர்ணி யரசரின் போர்க்களமாக இருந்தது. ஆகவே, துளுநாட்டரசருக்கு அக்காலத்தில் வடக் கிலும் கிழக்கிலும் போர்செய்யவேண்டிய சூழ்நிலை இருக்கவில்லை. தெற்கே சேர அரசருடனும் தென் கிழக்கே வடகொங்குநாட்டுடனும் அவர்கள் அடிக் கடி போர் செய்ய வேண்டியிருந்தது. ச