உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துளு நாட்டு வரலாறு

31

துளுநாட்டரசர் துளு நாட்டு வரலாறு 31 துளுநாட்டு (கொங்கணத்து) நன்னருடைய வரலாறு சங்க இலக்கியங்களிலிருந்து சிறிது கிடைக்கிறது. கொங்கணத்து அரசர் கொங்கா ணங் கிழார் என்று பெயர் பெற்றிருந்தனர். துளு நாடு கொங்கணம் என்றும் கொண்கானம் என்றும் கொண் பெருங்கானம் என்றும் கூறப்பட்டது. நன்னன் என்பது. அவர்கள் குடும்பப் பெயர் அவர்கள் நன்னன் வேண்மான் என்றும் கூறப் பட்டனர். நன்னன் குடும்பப் பெண்டிர் ‘நன்னன் வேண்மாள்' என்று பெயர் கூறப்பட்டனர்.1 கிறிஸ்து சகாப்தத்தின் தொடக்கத்தில் துளுநாட்டை அரசாண்ட நன்ன அரசரைப் பற் றித் தமிழில் சங்க இலக்கியங்களில் மட்டும் கிடைக்கின்றன. வேறு மொழி நூல்களில் இவ்வரலாறு கிடைக்கவில்லை. நன்னர்களில் மூன்று அரசரைப் பற்றிச் சில செய்திகள் சங்க நூல்களிலிருந்து தெரிகின்றன. அந்த மூன்று அரசரும் கி. பி. 2 ஆம் நூற்றாண் டில் இருந்தவர் எனத்தெரிகின்றனர். இவர்களுக்கு முன்பிருந்த நன்னர்களைப் பற்றியும் பின்பு இருந்த நன்னர்களைப் பற்றியும் ஒன்றுந் தெரியவில்லை. இந்த மூன்று நன்னர்களை முதலாம் நன்னன், இரண்டாம் நன்னன், மூன்றாம் நன்னன் என்று பெயர் இட்டு ஆராய்வோம். முதலாம் நன்னன் (ஏறத்தாழ கி. பி. 100 முதல் 125] 1. சிலம்பு - காட்சிக்காதை 5 ஆம் அடி. அரும்பதவுரை காண்க.