உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துளு நாட்டு வரலாறு

43

துளு நாட்டு வரலாறு 43 முறைக்கு முன்பு இருந்தவன் பசும்பூண் பாண்டி யன். இதற்குச் சங்க நூல்களில் சான்றுகள் உள் இச்சான்றுகளைக் காட்டி விளக்குவதற்கு ளன. இது இடம் அன்று. பசும்பூண் பாண்டியன், சேரன் செங்குட்டுவ னுடைய தமயனான களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரலின் காலத்திலிருந்த பாண்டியன். பசும் பூண் பாண்டியன், கொங்குநாட்டில் சில இடங்களை வென்று கைப்பற்றிக்கொண்டதனால், கொங்குநாட் டுச் சிற்றரசர் சிலர் அவனுக்குக் கீழடங்கினார்கள். அவர்களில் முக்கியமானவன், தகடூரை யரசாண்ட அதிகமான் பரம்பரையைச் சேர்ந்த நெடுமிடல் அஞ்சி என்பவன். பாண்டியனுக்குக் கீழடங்கிய நெடுமிடல் அஞ்சி அப்பாண்டியனுடைய சேனைத் தலைவனாக அமைந்தான். பசும்பூண் பாண்டியன் கொங்கு நாட்டின் சில பகுதிகளை வென்று கைப் பற்றிக் கொண்டதை, 'வாடாப் பூவிற் கோங்கர் ஓட்டி நாடுபல தந்த பசும்பூண் பாண்டியன் என்று அகநானூறு கூறுகிறது. கொங்குநாட்டுச் சிற்றரசர்களில் முதன்மை யானவர் தகடூர் அரசரான அஞ்சி யரசர்கள். அவ்வரசபரம்பரையில் வந்த நெடுமிடல் அஞ்சி பசும்பூண் பாண்டியனுக்குக் கீழடங்கியதோடு அப்பாண்டியனுடைய சேனாபதியாகவும் அமைந்து விட்டது கண்டு கொங்குநாட்டார் அவனை வெறுத் தார்கள். செய்யுள் 253:4-5.