துளு நாட்டு வரலாறு
45
துளு நாட்டு வரலாறு பாண்டியனின் துளுநாட்டுப் போர் 45 துளுநாட்டு நன்ன அரசர் தங்கள் நாட்டுக்கு அருகில் இருந்த வடகொங்குநாட்டில் ஆதிக்கம் பெற முயன்றார்கள் என்று கூறினோம். அதனால், வடகொங்கு நாட்டைக் கைப்பற்ற முயன்ற பசும் பூண் பாண்டியனுக்குத் துளுநாட்டரசர் பகைவரா யினர். பசும்பூண் பாண்டியன் துளுநாட்டின் மேல் படையெடுத்துச் சென்றான். பாண்டியன் சேனையை, அவனுடைய சேனைத் தலைவனான அதிகமான் நெடு மிடல் அஞ்சி நடத்திச் சென்று துளுநாட்டில் புகுந்தான். அவனை நன்னன் (இரண்டாவன்) உடைய சேனைத் தலைவனான மிஞிலி என்பவன் பாழி என்னும் ஊருக்கருகில் எதிர்த்துப் போர் செய்தான். அப்போரில் அதிகமான் நெடுமிடல் அஞ்சி கொல்லப்பட்டு இறந்தான். இதை 'கறையடி யானை நன்னன் பாழி ஊட்டரு மரபின் அஞ்சுவரு பேய்க் கூட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி, புள்ளிற் கேம மாகிய பெரும் பெயர் வெள்ளத் தானை அதிகன் கொன்று உவந்து ஒள்வான் அமலை ஆடிய ஞாட்பு."* என்று அகப்பாட்டு கூறுகிறது. அதிகமான் நெடுமிடல் அஞ்சி துளுநாட்டில் பாழிப்போரில் இறந்த செய்தியைக் கேட்டு அவன் மேல் வெறுப்புக் கொண்டிருந்த கொங்கர் மகிழ்ச்சி கொண்டாடினார்கள் என்று குறுந் தொகைச் செய்யுள் கூறுகிறது. EX அகம் 142: 9-14.