உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துளு நாட்டு வரலாறு

47

துளு நாட்டு வரலாறு 47 வராதபடி தடுத்துக் குறும்பு செய்துகொண்டிருந் தார்கள். இந்தக் குறும்பை நார்முடிச்சேரலின் தந்தையராகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (முதலாம் நன்னன் காலத்தில்) வென்றான் என் பதை மேலே கூறினோம். இரண்டாவது காரணம். நன்னன் இரண்டா வன் சேரநாட்டுக்கு உரிய பூழி நாட்டைப் பிடித் துக்கொண்டான். இது களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரலின் காலத்தில் நடந்தது. ஆகவே இழந்த பூழி நாட்டை மீட்டுக்கொள்ள வேண்டியது சேர னுடைய கடமையாக இருந்தது. மூன்றாவது காரணம். நன்னன் வடகொங்கு நாட்டிலிருந்த புன்னாட்டைக் கைப்பற்றிக் கொண்ட தாகும். அக்காலத்தில் புன்னாடு நீலக்கல் சுரங்கங் களுக்குப் பேர் பெற்றிருந்த செழிப்பான நாடாக இருந்தது. புன்னாட்டு நீலக் கற்களை உரோம தேசத்தார் விரும்பி வாங்கினார்கள். தமிழகத் துறைமுகங்களுக்கு வந்த யவனக் கப்பல் வாணி கர் சேரநாட்டு மிளகையும் புன்னாட்டு நீலக்கற்களை யும் அதிகவிலை கொடுத்து வாங்கிக் கொண்டு போனார்கள். கி.பி. 140-க்கும் 169-க்கும் இடையில் இருந்த தாலமி என்னும் யவனர் தமது நூலில் புன்னாட்டு நீலக்கற்களைப்பற்றியும் எழுதியுள்ளார். அவர் புன்னாட்டைப் பௌன்னாட என்று கூறு கிறார். புன்னாடு உள்நாட்டிலிருந்தது என்றும் அங்கு நீலக்கற்கள் கிடைத்தன என்றும் அந்நாட் டைக் கடற்கொள்ளைக்காரர் அரசாண்டனர் என் றும் அவர் எழுதியுள்ளார்.