193
சாந்தியின் சிகரம்
ஸ்ரீதரனுக்கு மட்டும் எப்படியாவது தன் பிதா வந்திருக்கும் விஷயத்தைத் தன் தாயிடம் ரகஸியமாய்க் கூறி விட வேணும் என்று உள்ளுக்குள் பதைபதைக்கிறது. ஜெயிலரின் எதிரில் தெரிவிக்க மனமில்லை. என்ன விதமான தந்திரம் செய்யலாம், எப்படி இந்த முக்ய விஷயத்தை அறிவிக்கலாம், என்று தனக்குள் பலமாக எண்ணமிட்டவாறு, அதை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல், அவரவர்களுக்குத் தகுந்தபடி பேசிக் கொண்டிருக்கையில், சிறைச் சாலைக்குள்ளே ஒரே இரைச்சலும், கலாட்டாவுமாக சத்தங் கேட்டது; உடனே, ஒரு வார்டர் ஓடி வந்து, ஜெயிலரிடம், “ஸார்… உள்ளே கைதிகளுக்குள், திடீரென்று கலகம் உண்டாகி, பலத்த அடிதடியில் முடிந்து ப்ரமாதப்படுகிறது. உடனே வாருங்கள்” என்று அவஸரமாகக் கூப்பிட்டான்.
சிறைச்சாலையில், இம்மாதிரி அடிக்கடி நேருவதும், தண்டனைக்கு மேல் தண்டனையாகப் பல தரம் கொடுப்பதும் வழக்கமாதலால், ஜெயிலருக்கு இதைக் கேட்டதும், எரிச்சலாக இருந்தது. ஹெட் வார்டரையனுப்பி, முதலில் பார்க்கச் செய்தார். அவன் போய்ப் பார்த்து வந்ததும், “ஸார் நீங்கள்தான் சவுக்குடன் வர வேண்டும். கடுமையான சண்டையாகி விட்டது; அடிதடியில் ரத்தம் கூட பீறி விட்டது. சீக்கிரம் வாருங்கள்!” என்று அவசரமாகக் கூப்பிட்டான். ஹெட் வார்டரை இங்கு நிறுத்தி விட்டு, சவுக்குடன் ஜெயிலர் ஓட்டமாக ஓடினார்.
ஹெட் வார்டர் ஸ்ரீதரனுக்குக் காவலாக இருந்தான். அந்த சமயம் வீதியில், போலீஸ் வேன் வரும் சத்தம் கேட்டு, வார்டர் பெரிய கேட்டருகில் ஓடி, சந்தால் எட்டி, வாசல் பக்கம் பார்த்தான். ஏதோ கைதிகளை ஏற்றிக் கொண்டு, போலீஸ் வேன் வந்திருப்பதை