உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

219

சாந்தியின் சிகரம்

போகும் ரகஸியத்தை, நானும், அப்பாவும் ஏற்கெனவே அறிந்து விட்டோம்: அதை நானே சொல்லி விடுகிறேன்… டாக்டருடைய தகப்பனார் அதே சிறைச்சாலையில் இருக்கிறார்; அவருக்கு உண்டான திடீர் விபத்திற்கு, டாக்டரே வைத்தியம் செய்கிறார். இதுதானே நீங்கள் சொல்லப் போவது? இதையே நான் முதலில் உங்களுக்குச் சொல்வதற்காகவே வரவழைத்தேன். ஏனெனில் சிறைச்சாலையின் விஷயம் எதையும் கைதிகள் வெளியில் சொல்லக் கூடாது! என்பது பெரிய சட்டம். அதனால், இதையொரு வேளை, அண்ணன் சொல்வதற்குச் சந்தர்ப்பப்படாமல், தவித்திருப்பாரோ என்னவோ என்று, நான் எண்ணியே வரவழைத்தேன்—என்று சொல்வதைக் கேட்ட எல்லோரும் அதிக வியப்படைந்து, ‘எப்படி ஸிஸ்டர் உங்களுக்கு இது விஷயம் இதற்குள் தெரிந்து விட்டது. என்ன ஆச்சரியம்! அண்ணன் சமயம் பார்த்து, அம்மாவிடம் இந்த ரகஸியத்தைக் காதோடு சொல்லி விட்டார். அதை உங்களிடம் தெரிவித்து, எப்படியாவது அவரை நாங்களும் பார்க்கும்படிக்கு உங்களைக் கேட்க வேண்டுமென்று எண்ணினோம். இது தவிர, வேறு என்ன தகவல் கிடைத்திருக்கிறது. சொல்லுங்கள்…’ என்று தாமோதான் பதைக்கப் பதைக்கக் கேட்டான்

அம்பு:-மிஸ்டர் தாமோதரம்! உங்களுடைய ஆவலும், அன்பும் எத்தனை உச்ச ஸ்தாயியில் நிர்த்தனம் செய்கிறது என்பதை, உங்கள் முகமும், ஒவ்வொரு மூச்சும் நன்றாக எடுத்துக் காட்டுகிறது. இந்த அன்பும், ஐக்யமும் ஆதியிலேயே இருந்திருக்குமாயின், உங்கள் குடும்பம் இம்மாதிரி சிதறி சீர் குலைந்திருக்காதல்லவா… போகட்டும். இனியாவது திருந்தி விட்டதே