உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

247

சாந்தியின் சிகரம்

விடுதலை செய்து விடுவார்கள். அப்போது உமக்கு எழுதுகிறேன்; நீர் வந்து அழைத்துச் செல்லலாம். இந்தப் பாவியை மறக்காமல், என்றும் மன்னித்து, அன்புடனிருக்க ப்ரார்த்திக்கின்றேன். இத்தகைய ஒரு பந்தம் நமக்குள் இருப்பதனால்தான், நீர் இந்த இடத்திற்கு மாற்றப்பட்டு வந்த நாள் முதல், உம்மிடம் என்னையறியாத ஒரு அலாதி ப்ரீதியும், மதிப்பும், நம்பிக்கையும் இருந்தது போலும். டாக்டர்! உங்கள் பிதாவை ஒரு முறை பார்த்து விட்டுப் போங்கள்!” என்று அன்பு ததும்பக் கூறி, அவனை தனி விடுதிக்கு அழைத்துச் சென்று, ஏற்கெனவே அங்கு தயாராக வந்துள்ள ஸ்ரீதரனின் பிதாவைச் சந்திக்க வைத்தார்! எங்குமில்லாத ஆநந்தம், என்றுமில்லாத ஆவேசம் பொங்கி வந்ததால், ஸ்ரீதரன் தன் ஜென்மத்திலேயே கண்டிராத ஒரு புத்துணர்ச்சியுடன் ‘அப்பா!’ என்று அழைத்து, மார்புற அப்படியே தழுவிக் கொண்டு, ஆநந்தக் கண்ணீரைச் சொரிந்தான்.

பிதாவும், தனது உணர்ச்சி வேகம் தணியும் வரையில், மெய் மறந்த நிலைமையில் மூழ்கி இருந்து பின்பு… “கண்மணீ! க்ஷேமமாகப் போய் வா! இந்தக் கொலை வழக்கில் நீ வந்திருந்ததானது, நம் குடும்பத்திற்கே ஒரு க்ஷேமத்தையும், சாந்தியையும் கொடுப்பதற்காகத்தான்! மேலும், நாம் எல்லாம் நல்லதற்கே என்றே எண்ண வேணும்! நீ இங்கு வரா விட்டால், இந்தப் பாவிக்கு இப்போது கிடைத்த ஆநந்தம் கிடைக்குமா! ஒரு நன்மையைக் காட்ட, ஒரு தீமை உண்டாவது உலகவியல்புதானே? பாத்திரம் நெருப்பில் பொசுங்கினால்தானே, நாம் அதனுள் வேகிய பண்டத்தைப் புசிக்க முடிகிறது… கண்மணீ… உண்மை.. உமை… பக்தி… பத்தி… இந்த மந்திர உபதேசத்தை நான் உன்னிடம் பெற முடியுமா!