உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


5. புகழ் ஏணி

ஹைதரின் வாழ்க்கை தொட்டில் பருவத்திலிருந்தே, இடர்கள் பல நிறைந்தது. இவற்றைத் தாங்கும் உடலுரமும், உள உரமும் அவனுக்கு வாய்த்திருந்தது. ஆனால், அவன் புறவாழ்வில் காணாத மென்மையும், இனிமையும் அவன் அகவாழ்வில் தோய்ந்திருந்தது, குடும்ப பாசத்துக்கும், நேசத்துக்கும் நேரமில்லாத அவன் வீர வாழ்வில், குடும்ப பாசமும், நேச பாசமும் நிலைத்திருந்தன.

ஹைதரின் தமையனான ஷாபாஸுக்கு முதல் மனைவி மூலம் ஒரு புதல்வி இருந்தாள். முதல் மனைவி இறந்த பின், இரண்டாவது மனைவி மூலம் இரண்டு புதல்வியர்களும், காதர் சாகிபு என்ற புதல்வனும் இருந்தனர். மூத்த மனைவியின் புதல்வி லாலா மியான் என்ற செல்வருக்கு, மணம் செய்து வைக்கப்பட்டாள்.

ஹைதருக்கு 19 ஆண்டு நிறைவுற்ற பின் ஷாபாஸ், அவனுக்கு ஷாமியான் மாய்னுதீன் என்பவரின் புதல்வியாகிய பக்ருன்னிசாவை மனைவியாக்கினான். ஒரு புதல்வி பிறந்ததன் பின், அந்நங்கை வாத நோய்ப்பட்டுப் பாயும், படுக்கையுமானாள். அவளிருக்க, மற்றொரு மனைவியைக் கொள்ள ஹைதர் விரும்பவில்லை. ஆயினும், அவன் செல்வமும், செல்வாக்கும் வளருந்தோறும், ஓர் ஆண்மகவில்லாக் குறை நினைந்து, அந்நங்கை உருகினாள். மற்றும் ஒரு துணை தேடும்படி, அவள் ஹைதரை வற்புறுத்தினாள். அதன்படி ஹைதர், குர்ம் கூண்டாக் கோட்டைத் தலைவனான மீர் அலி ரஸா கானின் மைத்துனியை விரும்பி, மணம் செய்து கொண்டான். அவள் தந்தை மக்தூம் சாகிபு என்பவர். இந்நங்கையின் வீரப் புதல்வனே திப்பு. ஹைதர் தேவனஹள்ளிப் போரில் வெற்றி பெற்ற அதே ஆண்டிலேயே,