உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புகழ் ஏணி

37

யிருந்தது. இத்தகையவர்களில் நஞ்சி ராஜனின் தம்பியாகிய தேவராஜன் ஒருவன். அவன் மறை சதிகளில் ஈடுபட்டிருந்து, ஒரு நாள் ஒரு படையுடன் அரண்மனையை வளைத்துக் கொண்டான். ஹைதருக்கும், நஞ்சி ராஜனுக்கும் இது செய்தி எட்டுமுன், அரண்மனை வாயிலை நோக்கி, பீரங்கிகள் முழங்கின. துப்பாக்கிக் குண்டுகளும் பீரங்கிக் குண்டுகளும் அரண்மனை மதில்களைத் துளைக்கத் தொடங்கின. ஆனால், நஞ்சி ராஜனும், ஹைதரும் இவற்றை அறிந்து, விரைந்து வந்து கிளர்ச்சியை அடக்கினர்.

ஹைதர் அலி, மைசூர் அரசின் பாதுகாப்பை உன்னி, தொலைவிடங்களிலிருந்து வீரர் பலரைக் கொணர்ந்து, படையை வலுப்படுத்தினான். பிரஞ்சுக்காரர் பலரைப் படையின் பயிற்சித் துறையிலும், அமைப்பாண்மைத் துறையிலும் அமர்வித்தான். அத்துடன் ஆர்க்காட்டில் முகமதலியால், அருமைஅறியாது துரத்தப்பட்ட பல படைத் தலைவர்களை வரவழைத்து, உயர் ஊதியத்தால் அவர்களைத் தன்னுடன் பிணைத்தான். இவர்களில் ஆசாத் கான், சர்தார் கான், முகமது உமர் முதலியவர்கள் முக்கியமானவர்கள். முகமது உமரின் புதல்வன் முகமத் அலியே, ஹைதரின் பிற்கால வாழ்வில், மைசூரின் ஒப்பற்ற படைத தலைவனானான்.

வளர்ந்து வரும் ஹைதரின் புகழ் கண்டு, வெளிநாட்டு எதிரிகளை விட, உள்நாட்டு எதிரிகள் கலங்கினர். அதே சமயம், அவனை நேரே எதிர்க்கவும் அஞ்சினர். நஞ்சி ராஜனை, அவன் இல்லாத சமயம் ,அகற்றுவதே அவன் வலுவைக் குறைக்க வழி என்று அவர்கள் திட்டமிட்டனர். அதைச் செயல்படுத்தவும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல், பாலக்காட்டுப் பகுதிகளில் சில கிளர்ச்சிகளை அடக்குவதற்காக, நஞ்சி ராஜனும் ஹைதரும் சென்றி-