உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னேதான்!

13

இது முதல் குற்றம் என்பதால் ஆறு மாதம் கடுங்காவல் என்று மாஜிஸ்ட்ரேட் தீர்ப்பளித்தார். முத்து, கண்ணீர் சிந்தியபடி நின்று கொண்டிருந்த அப்பாசாமியைப் பார்த்து 'அழாதே!அழாதே!' என்று கூறுவது போலத் தலையை அசைத்தான்.

எம்பெருமாள் செட்டியார் வீட்டுத்தோட்டத்தில் மரம் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றியும் மாடு கன்றுகளை மேய்த்துக்கொண்டும் இருந்தமொட்டையன் பெண் குட்டிஅம்மாள்,முத்துச்சாமியிடம் மனதைப் பறி கொடுத்துவிட்டிருந்தாள்.அவளைக் காண ஒருவரும் அறியாமல் முத்து,தோட்டத்துக் குப் போவான். அவள் போடும் பழைய சோற்றை, பால்பாயாசம் போலச் சுவைத்துச் சாப்பிடுவான்; அவள் சொல்லும் புத்திமதிகளைக் கோபப்படாமல் கேட்டுக் கொள்வான்.

"இத்தனை பெரிய உலகத்திலே, உனக்கு மட்டும்தானா கிடைக்கல்லே ஒரு வேலை. கட்டிக்க, கட்டிக்கன்னு சொல்றியே, உன் புருஷன் என்ன வேலை செய்யறாருன்னு யாராச்சும் கேட்டா என்ன சொல்ல?"

"எம்பெருமாளு போலத்தான், எம்புருஷனும் ஒரு இடத்திலே, கைகட்டி வேலை செய்யறதில்லைன்னு சொல்லு."

"நல்லா இருக்குது உன் பேச்சு. அவருக்கு இருக்குது இலட்ச இலட்சமாப் பணம்; உட்கார்ந்துகிட்டு ஒரு வேலையும் செய்யாம சாப்பிடம் முடியும். நீ அப்படியா...?"

"அப்ப, இருக்கறவங்களுக்கு ஒரு நியாயம், இல்லாதவங்களுக்கு வேறே ஒரு நியாயம்னு சொல்லு."

"இதெல்லாம் பேச எனக்குத் தெரியாது-என்னை கட்டிக்கிட்டா, நல்லபடி வாழவைக்க உனக்கு வகை இருக்குதா,இல்லையா, அதைச் சொல்லு."

இவ்விதமான பேச்சு நடக்கும் முத்துச்சாமிக்கும் குட்டியம்மாளுக்கும்; கோபம் துளியும் வராது முத்துவுக்கு—அந்தப் பெண்ணின் பேச்சிலே அவ்வளவு பாகு கலந்து இருக்கும்.