உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியின் பதுங்கலும் பாய்தலும்

77

மதிலேறி உட்பாய்ந்து, கோட்டையை மராட்டியர் கைப்பற்ற வகை செய்தான். கோட்டைக்குள்ளிருந்தவர்களில், பெரும்பாலோர் மராட்டியர் கையில் சித்திரவதைக்கு ஆளானார்கள்.

இச்சமயம், பேஷ்வா மாதவ ராவ் உடல் நலிவுற்றுப் பூனாவுக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. போரில் இதனால், ஹைதருக்குச் சிறிது ஓய்வு கிட்டியதாகத் தோற்றிற்று. ஆனால், பேஷ்வாவின் தாய் மாமனான திரியம்பக ராவ் படைத் தலைமை ஏற்று, போரை முன்னிலும் மும்முரமாக நடத்தினான். மாதவ ராவ் கைப்பற்றாத கோட்டைகள், அவன் கை வசமாயின. இவற்றுள் குர்ரம் குண்டாக் கோட்டை முக்கியமானது. தலைமைக் கோட்டையான சீரங்கப்பட்டணத்துக்கும் ஆபத்து நெருங்கி வந்தது.

ஹைதர் தன் முழுப்படை வலுவையும் திரட்டி, சீரங்க பட்டணத்தை எதிரி அணுகாமல், தடுக்க முற்பட்டான். அக்கோட்டைக்கு இருபது கல் வடதிசையில், குன்றுகளின் நடுவில் மேலுக்கோட்டை என்ற திருக்கோவில் இருந்தது. ஹைதர் அதனை அணுகும் கணவாய் ஒன்றை வளைத்து, பிறை வடிவில் குன்றின் மேல், தன் படைகளை நிறுத்தி வைத்தான். ஆனால், அவன் போதாத காலத்துக்கு, அவ்வளைவுக்கு எதிராக இருந்த குன்றை அவன் கவனிக்கவில்லை. அதைப் பீரங்கித் தளமாகப் பயன்படுத்தி, மராட்டியர் ஹைதர் படைக்குப் பேரழிவு செய்தனர். ஹைதரிடம் அவ்வளவு ஆற்றல் வாய்ந்த பெரிய பீரங்கிகள் இல்லை. ஆகவே, பல மணி நேரம் அழிவைப் பார்த்துக் கொண்டிருந்தும், அவன் செயலற்றிருக்க வேண்டியதாயிற்று.

முன் பகுதியைப் போராட விட்டுக் கொண்டே, பின்புறமாகத் தன் படைகளை இரவோடிரவாகச் சீரங்கப்பட்டணம்