உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 இலக்கிய மரபு மலை,ஆறு,நாடு,ஊர்,பறை,குதிரை, யானை, மாலை, பெயர், கொடி என்னும் பத்தையும் பாடுவது தசாங்கம் எனக் கூறப்படும்.* சின்னப்பூ, யானைத்தொழில், ஒலி அந்தாதி, இன்னி சைத் தொகை, ஐம்படை விருத்தம், நாழிகைக்கவி, விளக்கு நிலை, யாண்டுநிலை, பறைநிலை முதலிய பெயர்களால் நூல் கள் அமையும் என இலக்கணம் கூறும். அவ்வாறு அமைந்த நூல்கள் இப்போது இல்லை. இயன் மொழி வாழ்த்து, கடைநிலை, பெருமங்கலம் (பிறந்தநாள் வாழ்த்து), கடைக்கூட்டு நிலை (பரிசில் கடா தல்), பரிசில்விடை முதலிய பொருள்கள் பற்றித் தனிப் பாட்டுக்கள் இயற்றுதல் உண்டு. புறநானூற்றில் அத் தகைய பழம் பாட்டுக்கள் உள்ளன. /திருப்பள்ளி யெழுச்சி தலைவன் உறங்கச் செல்லுதல் பற்றியும் விழித்தெழு தல் பற்றியும் பழங்காலம்முதல் பாட்டுக்கள் அமைந்து வருகின்றன. அவை கண்படை நிலை எனவும் துயிலெடை நிலை எனவும் தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டன.

  • மலையே யாறே நாடே ஊரே

பறையே பரியே களிறே தாரே பெயரே கொடியே என்றிவை தசாங்கம். - பன்னிரு பாட்டியல், 140. கண்படை கண்ணிய கண்படை நிலையும் -தொல்காப்பியம், பொருள். புறத்திணை. 87 தாவில் நல்லிசை கருதிய கிடந்தோர்க்குச் சூதர் ஏத்திய துயிலெடை நிலையும். ஷ 36 அடுதிறல் மன்னரை அருளிய எழுகெனத் தொடுகழல் மன்னனைத் துயிலெடுப் பின்று. புறப்பொருள் வெண்பா மாலை, பாடாண். 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/24&oldid=1681590" இலிருந்து மீள்விக்கப்பட்டது