காவியம் 71 கண்டறிந்து போற்றும் ஆவலே உள்ளது. அவற்றை விளக்குவதற்குத் தனிப் பாட்டுக்களும் உரைநடையில் அமையும் நூல்களுமே போதும். ஆகவே காவியத்திற்கு இடமில்லாமற் போகிறது. தவிர, போக்குவரத்துக் கருவிகளும் சமுதாயக் கடமை களும் பெருகப் பெருக, வாழ்க்கை வேகமுடையதாகிறது. பெரிய காவியங்களைப் படித்து இன்புறும் ஓய்வு கற்பவர்க்கு இல்லை. உள்ள காவியங்கள் சிலவற்றைப் படித்துப் போற்றினால் அதுவே போதும் என்ற நிலை உள்ளது து. விரைவில் படிப்பதற்குரிய வகையில் உரைநடை நூல்கள் உதவியாக இருக்கின்றன. கதைப் போக்கில் படிப்பதற்கோ கணக்கற்ற தொடர்கதைகளும் சிறுகதைகளும் உள்ளன. ஆகவே புதிய காவியங்கள் தேவையாக இல்லை. இன்று காவியங்கள் தோன்றாமைக்கு இவை காரணங் கள். ஆயின், தமிழ் இலக்கிய வரலாற்றில் பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு காவியங்கள் தோன்றாமலே இருந்தன. தேம்பாவணி, சீறாப்புராணம், இரட்சண்ய யாத்ரிகம் என்ற சமய காவியங்களும் தல புராணங்களும் தவிர, வேறு காவியம் தோன்றாமைக்குக் காரணம் வேறு. சிறு பிரபந்தங்களான பிள்ளைத்தமிழ், கலம்பகம், பரணி, உலா முதலியன தோன்றிப் பெருகியதே காரணம் என்பர் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்கள்.*
- ஓரளவு கவித்வ சக்தி வாய்ந்தவர்கள் ஸ்தலத்து மூர்த்திகளைக் குறித்துப்
பல சிறுபிரபந்தங்கள் இயற்றினர். கோவை, உலா, அந்தாதி, இரட்டைமணி மாலை, மும்மணிக்கோவை, நான்மணிமாலை முதலியன உதாரணங்களாம். இவற்றில் ஏகதேசமாகக் கவித்வ நயமும் காணப்பட்டன. இங்ஙனமாகச் சிறு முயற்சிகளில் கவிஞர்கள் ஈடுபட்டனர். பொதுமக்களும் இவற்றையே விரும்பிக் கற்பாராயினர். எனவே, புதிதாகக் காவியம் தோன்றுமாயின், அவற் றைக் கற்கும் மனப்பான்மையே பொதுமக்களுக்கு இல்லையாயிற்று, காவியம் தோன்றுதற்குரிய சூழ்நிலைதானும் மறைந்துவிட்டது. - எஸ். வையாபுரிப்பிள்ளை, காவிய காலம், ப.319.