உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
96

என்பவள் லக்கிய மரபு ஆண்டு தோறும் திருவிழாக் காலத்தில் நாடகங்கள் நடித்துவந்ததற்காக மானியம் அளித்த செய்தி உள்ளது. இவை முதலானவற்றால், பழங் காலத்தில் நாடகங்கள் பல நடிக்கப்பட்டுவந்தமை புலப்படும். ஆயின், அக் காலத்து நாடக நூல் ஒன்றும் கிடைக்கவில்லை. குறவஞ்சி குறவஞ்சி என்னும் நாடக நூல் இடைக் காலத்தே தோன்றி வளர்ந்தது. அது குறத்திப் பாட்டு என்னும் பெயராலும் வழங்கியது. திரிகூட ராசப்ப கவிராயரின் குற்றாலக் குறவஞ்சி இன்று இவ்வகை நாடகத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. அழகர் குறவஞ்சி, ஞானக் குறவஞ்சி, மீனாட்சியம்மை குறம், கொடுமளூர்க் குறவஞ்சி, சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம் முதலியன இவ்வகை யைச் சார்ந்தவை. இந்நாடகத்தில், தலைவன் ஒருவன் (மனிதன் அல்லது தெய்வம்) உலா வருவதாகவும், தலைவி தெருவில் வந்து அவனைக் கண்டு காதல் கொள்ளுவதாகவும், காதலால் வருந்தித் திங்கள் தென்றல் முதலியவற்றைப் பழிப்பதாக வும்,தலைவி பாங்கியைத் தூது அனுப்புவதாகவும், அவ் வழியே குறத்தி ஒருத்தி வருவதாகவும், அவள் தன் மலை வளம் முதலியவற்றைப் புகழ்வதாகவும், தலைவி அவளைக் குறி கேட்பதாகவும், குறத்தி தலைவியின் மனம் மகிழக் குறி கூறுவதாகவும், குறவன் அவளைத் தேடி வருவதாகவும், அவள் பரிசிலர்கப் பெற்ற அணிகலன்களைக் கண்டு அவன் ஐயுற்றுக் கேட்பதாகவும், அவள் தான் குறிகூறிப் பரிசு பெற்றது பற்றிக் கூறுவதாகவும் இந் நாடகம் அமைப்பது மரபு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/100&oldid=1681829" இலிருந்து மீள்விக்கப்பட்டது