98 இலக்கிய மரபு துண்ணும் பண்ணை முதலாளியும் உழுதுண்ணும் பள்ள னும் அவனுடைய மனைவியர் இருவரும் இந் நாடகத்தில் வரும் மாந்தர்கள். மூத்த புள்ளியும் இளைய பள்ளியும் ஆகிய மனைவியரிடையே உள்ள பூசலும் பிணக்கும் ஒருவரை ஒருவர் ஏசலும் இந் நாடகத்தில் விரிவாக இடம் பெறும். பண்ணை முதலாளியிடம் மூத்தவள் தன் கணவனைப் பற்றி முறையிடலும், அதனால் அவன் ஒறுக்கப்படுதலும்,பிறகு மூத்தவள் முதலாளியிடம் முறையிட்டு உதவுதலும், மீண்டும் பள்ளன் இளையவளிடமே பற்று மிகுந்து வாழ்தலும், அதனால் மனைவியர் இருவர்க்கும் இடையே தோன்றும் பூசலும் ஏசலும், பின்னர் விளையும் அமைதியும் முதலியவை விளக்கப்படும். கிராமத்து மக்களுக்குச் சுவை யூட்டும் பொருட்டே இவ்வாறு இரு மனைவியரிடையே பூசலும் ஏசலு மாக நாடகம் அமைந்தது எனலாம். இந் நாடகத்திலும் பல வகைச் செய்யுட்கள் விரவி ஓசை யின்பம் பயக்கும். நாட்டுப் பாடல்களின் இசையிலும் சில அமையும். முக்கூடற்பள்ளு, திருமலை முருகன் பள்ளு, திருவாரூர்ப் பள்ளு, பறாளைப் பள்ளு, கண்ணுடையம்மை பள்ளு, குரு கூர்ப் பள்ளு, வடகரைப்பள்ளு, கதிரை மலைப் பள்ளு, வையா புரிப் பள்ளு முதலான நாடக நூல்கள் இவ் வகையின. குறவஞ்சி பள்ளு ஆகிய இந்நாடகங்களில் கதை மாந்த ரின் கூற்றுக்கள் மட்டும் அல்லாமல், இடையிடையே நூலாசிரியராகிய புலவர் கூறுவனவாகச் செய்யுள் சில அமைவது உண்டு. கதை விளக்கத்திற்காக அவர் அமைக் கும் அத்தகைய செய்யுட்கள் கவிக்கூற்று எனப்படும். இவற்றில் சுவை எட்டும் அமையப் பாடுவர். நாடக நூல்கள் கற்றாரே அல்லாமல், மற்றோரும் கேட்டு இன்புறத் தக்கவை ஆதலால், மக்கள் பேசும் கொச்சைச் சொற்களும் இடையிடையே வருதல் உண்டு.
பக்கம்:இலக்கிய மரபு.pdf/102
Appearance