________________
றுகதை 16. தொடக்கம் சிறுகதையின் தொடக்கம் படிப்பவரின் ஆர்வத்தை யும் கற்பனையையும் தூண்டக் கூடிய வகையில் அமைவது உண்டு. தேர்ந்த சிறுகதை ஆசிரியர்கள் பலர் இவ்வகை யான தொடக்கத்தை அமைத்துச் சிறுகதை எழுதி யுள்ளனர். 'எதிர்பாராமல் வீட்டினுள் அடைக்கப்பட் டிருந்த தம் மனைவியின் நாயைக் காப்பதற்காக முயன்றபோது, காப்டன் பாரஸ்டியர் ஒரு காட்டுத்தீயில் சிக்கி மாண்டதாகச் செய்தி படித்தபோது, பலர் திடுக்கிட்டார்கள்': இப்படிச் சோமர் செட்மாம் எழுதிய (The lion's skin என்ற) ஒரு சிறுகதை தொடங்குகிறது. 66 தந்தியைக் கண்டு எல்லோரும் இடிந்து உட்கார்ந்து போனோம். அதில் கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லை போல் இருந்தது. சிவராமையர்- டேஞ்ஜரஸ் - என்ற இரண்டு வார்த்தைகளே இருந்தன. தந்தி சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருந் தது." இவ்வாறு தொடங்குகிறது கு. ப. ராஜகோபாலன் எழுதிய 'விடியுமா' என்ற சிறுகதை. இத்தகைய தொடக்கங்கள் சிறுகதைக்குக் கவர்ச்சி யூட்டிச் சுவை மிக்க அமைப்பைத் தருகின்றன. தோற்றம் சிறு கதை என்ற இலக்கிய வகை உலகத்தில் தோன்றி வளர்ந்து ஒரு நூற்றாண்டு தான் ஆயிற்று. அமெரிக்காவில் எட்கார் ஆலன் போ பற்பல சிறுகதைகளை எழுதிக் கலைச் செல்வமாகத் தந்த பிறகே, உலக அறிஞர்கள் சிறுகதையைத் தனிவகையான இலக்கியமாகப் போற்றத்