உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

180 இலக்கிய மரபு இது முரணாம் பின்னணி. காட்டைப் பின்னணியாகக் காட்டுவன ஒருபுறம். வீட் டையே பின்னணியாக்கிக் காட்டுதலும் உண்டு. காதலன் பிரிந்த பிறகு கண்ணுறங்க இயலாமல் வருந்துகிறாள் காதவி. ஆயின் அந்த ஊரில் புன்னைமரத்தில் நாரைகள் தங்கிக் கவலை இல்லாமல் உறங்குகின்றன: வதிகுருகு உறங்கும் இன்னிலைப் புன்னை... மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே.* அறிவு குறைந்த நாரை வயிற்றுக்கு உணவு தேடும் கடமை முடிந்தபின், அடர்ந்த இலைகளை உடைய புன்னைக்கிளையில் கவலை இல்லாமல் இனிது உறங்கும் காட்சி, பிரிவாற்றாத் துயரத்தால் உறங்காமல் வருந்தும் தலைவியின் நிலைக்கு முரணும் பின்னணியாக அமைந்தது. துன்ப காதலன் வருதலும், காதலியைக் காணுதலும் பற்றிய செய்திகள் ஊரில் ஒருவர் இருவர்க்குத் தெரிந்துவிட்டன. பிறகு ஊரெல்லாம் செய்திகள் பரவிவிட்டன. இதற்குப் பின்னணி யாது? பலாப்பழம் நன்றாகப் பழுத்த நிலையில் குரங்கு தன் விரலால் தோண்டித் தின்றது. பழத்தின் மணம் ஊரெல்லாம் பரவிவிட்டதாம் : கடும்பல் ஊகக் கறைவிரல் ஏற்றை புடைத்தொடுபு உடைஇப் பூநாறு பலவுக்கனி காந்தளஞ் சிறுகுடிக் கமழும். காதலன் யாரும் அறியாமல் மறைந்து வாழும் கள வொழுக்கத்தை விட்டுத் திருமணம் செய்துகொண்டு பல ரும் அறிய வாழும் இல்வாழ்க்கையை விரும்புகின்றான்; 十 குறுந்தொகை, 5. 373.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/184&oldid=1681954" இலிருந்து மீள்விக்கப்பட்டது