உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாவல் 135 நாவலில் வாழ்க்கையின் பல திறங்களையும் சிக்கல்களையும் நன்கு காட்ட முடியும். சிறுகதையில் அது முடியாது. மற்றொன்று : மனிதரை நன்கு அறிய வேண்டுமானால், அவர்களோடு சிறிது நேரம் பழகுதல் போதாது. சில நாட் கள் அல்லது சில வாரங்கள் அவர்களோடு இருந்து அவர் களின்வாழ்க்கையைக் கவனித்தால்தான், அவர்களைப்பற்றி நன்கு அறிய முடியும். உலக வாழ்க்கையில் இது உண்மை யாதல் போலவே, கதைமாந்தரை அறிவதிலும் உண்மை யாகும். சிறுகதையில் வரும் மாந்தரோடு நாம் பழகுவது சில நொடிப்பொழுதே; சந்தையிலும் வழிப் பயணத்திலும் கண்டு பழகுதல் போல் அவர்களோடு பழகுவதால்,அவர் கள் நம் நெஞ்சில் பதிவதில்லை. நாவலில் நெடுநேரம் பழ கும் வாய்ப்பு உள்ளது; பக்கத்து வீட்டாருடனும் நண்ப ருடனும் பழகுவது போல், நாவலின் கற்பனை மாந்தருடன் பயின்று பழகுவதால் அவர்கள் நம்மோடு நெருங்கிய உறவு கொண்டு நம் நெஞ்சில் நிலைத்த இடம் பெறுகின்றனர். நாவல்: நாடகம் நாவலுக்கும் நாடகத்திற்கும் ஒற்றுமை பல உண்டு. கரு, கற்பனைமாந்தர், முரண், போராட்டம், முடிவு முதலிய வற்றின் அமைப்பில் இருவகை இலக்கியமும் ஒத்திருக்கும். அதனால் எந்த நாவலையும் நாடகப் போக்கில் அமைத்து நடிக்கும் வழக்கம் இருந்துவருதலைக் காண்கிறோம். அதனா லேயே, நாவலைச் சட்டைப்பை நாடகம் (a pochet theatre) என்று கூறுதலும் உண்டு. ஆயின், நாவலாசிரியர்க்கு மிக்க உரிமை இருத்தல் போல் நாடகம் எழுதும் ஆசிரியர்க்கு உரிமை இல்லை.நாடக ஆசிரியர் பலவகையிலும் கட்டுப்பட்டே எழுத வேண்டி யுள்ளது. நாவலுக்கு அவ்வளவு கட்டுப்பாடுகள் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/139&oldid=1681976" இலிருந்து மீள்விக்கப்பட்டது