________________
92 பாட்டும் பேச்சும் இலக்கிய மரபு செய்யுள் வடிவில் நாடகம் எழுதிவந்த பழங் காலத்தில், நாடகம் முதலில் எழுதிப் படிக்கப்பட்டது என்றும்,அதன் சுவையை மேடையில் கண்டு நுகர விரும்பியபோது நடிக் கப்பட்டது என்றும் வில்லியம்ஸ் என்ற அறிஞர் கருது கிறார். இக்காலத்தில் அதற்கு மாறாக, நாடகம் மேடையில் நடிக்கப்படுத்தல் கருதியே எழுதப்படுகிறது என்பர். செய் யுள் நாடகம் அரங்கை அமைத்துத் தந்தது என்றும்,இக் காலத்து உரைநடை நாடகமோ அரங்கினால் அமைக்கப்படு கிறது என்றும் அவர் கூறுகிறார்.* தமிழ்நாட்டில் சென்ற நூற்றாண்டிலும் இந்த நூற் றாண்டின் தொடக்கத்திலும் நடிக்கப்பட்டுவந்த நாடகங் களை ஆராய்ந்தால், அவற்றில் பெரும்பகுதி பாடலாகவே பாடப்பட்டு வந்ததை அறியலாம்; இடையிடையே உரை நடையாகப் பேச்சு அமைந்திருந்தது. தெருக்கூத்துக் களில் இன்றும் பாடலே பெரும் பங்காக இருப்பதைக் காணலாம். அதனால், பழங் காலத்து நாடக மேடைகளில் பாடல் பெரும்பான்மையாகவும் பேச்சு சிறுபான்மையாகவும் இருந்த நிலை அறியக் கிடக்கிறது. கிரேக்க நாடகங்களிலும் பாட்டே முதலிடம் பெற்று விளங்கியது; பேச்சு அதற் கடுத்தபடி ஓரளவே இருந்தது. ஐரோப்பாவில் உரைநடையில் நாடகங்கள் பெருகிய பிறகு நாடக மேடைகளில் பாட்டைவிடப் பேச்சு மிகுதியாக அமைந்தது. அவற்றை ஒட்டி வளர்ந்த தமிழ் நாடகங் களிலும் இன்று பேச்சு மிகுதியாக அமைந்துள்ளது. The verse play produced the theatre, but the prose play was. produced by the theatre. -R. Williams, Drama from Ibsen to Eliot, p. 36.