உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

134 இலக்கிய மரபு நிகழும் நிகழ்ச்சிகளுக்கு இயைய அமைக்கப்படல் வேண்டும். காவியங்களில் போலவே, நாவலிலும் மனிதரின் இன்ப துன்பத்தில் இயற்கை கலந்து உணர்வதாகக் கூறப்படலாம்; முரணாக, மனிதரின் இன்ப துன்பத்தை எள்ளிப் புறக்கணிப்பதாகவும் கூறப்படலாம்; நிகழ்ச்சி களுக்குப் பின்னணியாகவும் புனையப்படலாம். பல துறைகளும் அமைதல் கதை, காவியமாகவும் நாடகமாகவும் வளர்ந்திருந்த நிலையில், வாழ்க்கையின் பல்வேறு துறைகளைத் தனித் தனியே விளக்க வழியில்லாமல் இருந்தது; எல்லோருக்கும் விளங்கக் கூடிய அரண்மனை வாழ்க்கை, காதல், வீரம், போர்க்களம், வெற்றி, திருமணம் முதலியன மட்டுமே பெரும்பாலும் காவியங்களிலும் நாடகங்களிலும் அமைந் தன. அவற்றைக் கடந்து, நாவல்களில் கதை அமையத் தொடங்கிய பிறகு, பெரிய மாறுதல் ஏற்படலாயிற்று. இன்று வாழ்க்கைத் துறைகளில் ஒவ்வொன்றும் கதை யாக வளர்ந்து நாவலில் அமைவதற்கு உரியதாகிவிட் டது. கடலில் மீன் பிடித்தல், போர்ப் பாசறையில் வாழ் தல், சிறையில் கிடத்தல், மலையேறல், காட்டில் வேட்டை யாடல், சந்தை வாணிகம், சட்ட மன்றம், ஓவியம் எழுதிப் பிழைத்தல், அலுவலகத்தில் தொழில் புரிதல் முதலிய துறைகளில் ஏதேனும் ஒன்று, நாவலாய் வளர்வதற்கு உரிய வகையில் கதையமைப்பைப் பெற முடிகிறது. நாவல்: சிறுகதை இன்று நாவலைவிடச் சிறுகதை வேகமாக வளர்ந்து வருகிறது. ஆயின் சிறுகதை எவ்வளவு வேகமான வளர்ச்சி உடையதாக இருந்தபோதிலும்,அது நாவலின் இடத்தைப் பெற முடியாது. ஏனெனின்,சிறுகதைக்கு இல்லாத சில சிறப்பியல்புகள் நாவலுக்கு உள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/138&oldid=1681996" இலிருந்து மீள்விக்கப்பட்டது