உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

94 இலக்கிய மரபு பழங் காலத்தில், நடிகர்களின் நடிப்பைப் பார்த்து உணர் வதைவிட, அவர்களின் பேச்சைக் கேட்டு உணர்வதே மிகுதியாக இருந்தது. இக் காலத்தில், கண்ணால் கண்டு உணரும் திறன் மக்களுக்கு வளர வளர, நடிகர்களின் பேச்சைவிட அவர்களின் நடிப்பு முதலிடம் பெற்று வரு. கிறது. நடிகர்களின் மொழி விளங்காவிட்டாலும், அவர் களின் நடிப்பைக் கண்டே நாடகம் இன்ன உணர்ச்சியைப் புலப்படுத்துகிறது என்றும், இன்ன கருத்து உடையது என்றும் உணரக் கூடியவாறு நடிப்பு முதன்மை பெற்று விளங்கிவருகிறது. ஆகவே, நாடகத்தில் உரையாடலுக்கு இருந்த சிறப்பு ஒரு சிறிது குறைந்துவருகிறது. உரையாடல் சிறப்புப் பெற்று விளங்கிய காலத்தில், நாடக ஆசிரியர்கள் அத் துறையில் நல்ல மரபுகளை அமைத் துக்கொண்டு தம் திறமையைப் புலப்படுத்தினர். அதனால் நாடக நூல்கள் சொல்லின் பெருமையை உணர்த்தும் இலக்கியச் செல்வங்களாக ஏற்பட்டன. இன்று, நடிப்பு முதன்மை பெற்றமையால், நாடகம் எழுதுவோரைவிட, நடத்துவோர்க்கே சிறப்பும் செல்வாக்கும் அமைகின்றன. அதனால், நாடக நூல்கள் இலக்கியச் செல்வங்களாக வளர் வதற்கு வாய்ப்புக் குறைந்துவருகிறது எனலாம். இவ் வகையில் ஐரோப்பாவும் அமெரிக்காவும் முன்னேறிய அள விற்கு இங்நாடு முன்னோறாவிடினும், இதன் போக்கும் அத் திசையிலேயே உள்ளது எனலாம். நடிப்பதற்காக இன்று எழுதப்படும் நாடகம் படிப்பதற்குத் தக்கதாக இல்லை; இலக்கியமாக விளங்கும் அளவிற்கு அதில் வளமான உடை யாடல்கள் இல்லை; அது வெறுங் குறிப்புக்களாக - நாட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/98&oldid=1682002" இலிருந்து மீள்விக்கப்பட்டது