உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

90 30 இலக்கிய மரபு பற்றியதாய், மனிதர் தம் போராட்டத்தில் தோற்பதாகவோ வீழ்ச்சியுறுவதாகவோ கூறுவதாகும் என்பர்.* மூன்று குரல்கள் பாட்டில் மூன்று குரல்கள் அமைவதாக எலியட் என் னும் அறிஞர் கூறியுள்ளார். அம் மூன்று குரல்களும் நாடக இலக்கியத்தில் அமைதலைக் காணலாம். நாடக ஆசிரியர் தமக்குத் தாமே கூறிக்கொள்ளுதல், அவர் தம்மைச் சார்ந்த வர்க்குக் கூறுதல், அவர் நாடக மாந்தரின் (கற்பனைப் பாத்திரத்தின்) வாயிலாக நாடகம் காண்போர்க்குக் கூறு தல் ஆகிய மூன்று குரல்களில், முன்னைய இரண்டும் குறிப் பாக நிற்க, மூன்றாம் குரல் மட்டுமே நாடக இலக்கியத்தில் வெளிப்படையாக அமைந்திருக்கும். இந்த மூன்றாம் குரல் மட்டுமே நாடகம் காண்போர்க்குக் கேட்கும். அதன் வாயி லாக உய்த்துணர வல்லவர்களுக்கே, ஆசிரியர் தமக்குத் தாம் உரைப்பதும், அவர் தம்மைச் சார்ந்தோர்க்கு உரைப் பதும் இன்ன என்று அறியக் கிடக்கும். சமயம்: நாடகம் ஐரோப்பாவில் நாடகம் தோன்றி வளர்ந்த பழைய வரலாற்றை ஆராய்ந்தால், சமய நோக்கமே பழைய

  • The comedy is a drama characterized by the fact that it deals with familiar life, with themes of comparatively slight dignity, and with successful issues in the conflict of humanity with opposing forces; while the tragedy is a drama dealing with life on an ideal plane, with themes of great dignity, and with failure or defeat as the issue of human conflict. R.M.Alden, An Introduction to Poetry, p. 86.

†The first is the voice of the poet talking to himself-or to nobody. The second is the voice of the poet addressing an audience, whether large or small. The third is the voice of the poet when he attempts to create a dramatic character speaking in verse. -T. S. Eliot, The Three Voices of Pcetry, p. 4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/94&oldid=1682003" இலிருந்து மீள்விக்கப்பட்டது