உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாடகம் 93 பேச்சும் நடிப்பும் சிலர், அது நாடகத்தில் பாட்டு மிகுதியாக இருந்த நிலையை அடுத்து, பேச்சு மிகுதியாக அமையும் நிலை வந்தது. அந் நிலையில் உணர்ச்சி மிகுந்தபோதெல்லாம் பேச்சு மிக நீண்ட தாக அமைவதும் உண்டு. ஆனால்; இக்காலத்து அறிஞர் பல இடங்களில் பொருந்தவில்லை என்று எடுத்துக்காட்டுகின்றனர். உணர்ச்சி மிகுந்த சில வேளை களில், வாயிலிருந்து சொற்கள் வருதல் அரிதாக இருத் தலையும், ஒன்றும் பேசாமல் உணர்ச்சித் துடிப்போடு சன் னலையோ, வெளியே தோன்றும் சுவரையோ உற்றுப் பார்த் தலையும் அவர்கள் எடுத்துக்கூறுவர். ஆகவே, வாழ்க் கையை ஒட்டிய நாடகத்தில் நீண்ட பேச்சுக்கு இடம் இல்லையே என்பர். அன்றியும், இன்று நாடக மேடையில் பலவகை ஓவியத் திரைகளை அமைக்கும் வாய்ப்பு மிகுந்து விட்டமையால், நாடகம் செவி வாயிலாக மட்டும் அல்லா மல் கண் வாயிலாகவும் மிகுதியாக விருந்தளிக்க முடிகிறது. இன்ன இடம் இன்ன நேரம் என்பவற்றை எல்லாம் முற்காலத்தில் நடிகர்களின் பேச்சின் வாயிலாக உணர வேண்டி யிருந்தது. இன்று நாடக அரங்கில் அமைக்கப் படும் காட்சிகளைக் கண்டே உணர முடிகிறது. அன்றியும்,

  • As richness of speech in drama has declined, so have the visual elements become more and more elaborated, and have even attempted individuation. Scenery has become more explicit as the power of reali- sation of place through language has declined. Acting has become more personal as the capacity to communicate experience in language has diminished. The visual elaboration of drama is related, in fact, not only to the impoverishment of language, but to changes in feeling.

-Raymond Williams, Drama from Ibsen to Eliot, p. 28.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/97&oldid=1682004" இலிருந்து மீள்விக்கப்பட்டது