உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாடகம் 91 நாடகங்களில் அடிப்படையாக இருந்தது என்றும்,சமயமும் நாடகக் கலையும் பிரிக்க முடியா தனவாக இருந்தன என்றும் அறியலாம். ஒன்றன் அழிவும், அதிலிருந்து மற்றொன்றன் ஆக்கமும் ஆகிய இரண்டனையும் தெய்வத்தின் அருளோடு பிணைத்து விளக்குவன அக்காலத்து நாடகங்கள் என்பர். ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கிரேக்க நாடகங்களில், ஒருவகை நாடகம் (tragedy fragos என்பது) பலிக்கு உரிய ஆட்டைச் சுற்றி ஆடும் கூத்தாகவும், மற்றொரு வகை நடனம் (comedy, komos என்பது) டியோனி சஸ் என்னும் தெய்வத்திற்காகக் கிராமத்துக் குழுவினர் ஆடிய கூத்தாகவும் இருந்தன.* பழைய கிரேக்க நாடக ஆசிரியர்கள் (Aeschylus, Sophocles, Euripides) எழு திய நாடகங்கள் மக்களுக்கும் தெய்வங்களுக்கும் உள்ள தொடர்பையும் அறநெறியையும் விளக்குவனவாகவே இருந்தன. அவை பொழுதுபோக்காய் மக்களை மகிழ் விக்க அமைந்தவை என்பதைவிட, சமயச் சடங்குகளாய்ப் பயன்பட்டவை எனலாம். எதிர்ப்பு 1642-ல் இங்கிலாந்தில் நாடக அரங்குகளை எல்லாம் மூடுமாறு பாராளுமன்றம் சட்டம் இயற்றியது. மறைமுக மாக நடத்தப்பட்ட நாடகங்கள் அரசாங்கத்தின் ஒறுப்புக்கு ஆளாயின. சட்டத்தை மீறி நடித்த நடிகர்கள் சாட்டை யால் அடிக்கப்பட்டனர். அவர்களின் நாடகத்தைக் கண்ட மக்கள் ஆளுக்கு ஐந்து ஷில்லிங் அபராதம் தர நேர்ந்தது. பதினெட்டு ஆண்டுகள் இந்நிலை இருந்தது. அதனால் அந்த நாட்டிலும் நாடகத்தின் வளர்ச்சி தடைப்பட்டது. அது போலவே, தமிழ்நாட்டிலும், சைன பௌத்த சமயங்கள் ஓங்கி யிருந்தபோது நாடகம் வளர்ச்சி குன்றியிருந்தது என்பர். J. B. Wilson, English Literature, p. 61.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/95&oldid=1682009" இலிருந்து மீள்விக்கப்பட்டது