உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடு ஆப்பிரிக்கா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 அரசியலிலும் பொருளாதாரத்திலும் கம்யூனிச சார்புடைய கொள்கைகளை டான்ஜேனியா வலியுறுத்தி அந்த நாட்டுடன் நெருங்கிய உறவு வருகிறது. கொண்டால் ஜாம்பியாவுக்குக் கேடு ஏற்படுமோ என்று சிலர் அஞ்சுகின்றனர். வெளிநாட்டு மூலதன மும் வேளாண்மையில் முன்னேற்றமும் மேம்பா டடைந்துள்ள போக்குவரத்து முறைகளும் கென்னத் காவுண்டாவின் ஒப்பற்ற தலைமையின்கீழ் இருப்பதால் அண்டையிலுள்ள வெள்ளை நாடுகளைப்பற்றிக் கவலைப் பட வேண்டியதில்லை. அண்டை நாடுகளில் ஆங்கிலே யர், போர்த்துக்கீசியர் ஆகியோரின் செல்வாக்குக் குறையக் குறைய ஜாம்பியாவின் செல்வாக்கு மிகுதி யாகும். பரோட்சிலந்து இது மூன்று லட்சம் மக்கள் உள்ள சதுப்பு நிலப் பகுதி. பிரிட்டிஷ் பேரரசுக்கு உட்பட்டு ஆப்பிரிக்கத் தலைவன் ஒருவனின் தனியாட்சி இங்கு நெடுங்காலம் நடந்தது.இது ஜாம்பியா நாட்டுக்குள் ஒரு தீவுபோல அதன் மேற்குப் பகுதியில்இருக்கிறது,