உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடு ஆப்பிரிக்கா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரொடீசியா 1960ஆம் ஆண்டு முதல், செய்திகளில் அடிக்கடி ரொடீசியா இடம் பெறுகிறது. ஏன் இந்த நிலை என் பதை முதலில் அறிந்து கொள்வோம். ஆப்பிரிக்காவிலேயே இன்று இருவகை அரசுகள் உள்ளன. ஒரு பக்கம் வெள்ளையருக்கே ஏற்றம் தரும் நாடுகள்; மற்றொரு பக்கம் மக்கள் ஆட்சி நிலவி செல் வாக்குள்ள ஆப்பிரிக்கத் தலைவர்களின் தலைமையில் சுதந்திரமாக இயங்கி வரும் நாடுகள். முதல் வகையில் தென் ஆப்பிரிக்காவும், மொசாம் பிக்கேயும் அங்கோலாவும் உள்ளன. இந்த நாடுகளில் 100-க்கு 15 பங்குள்ள ஐரோப்பியரிடம் 100-க்கு 85 பங் குள்ள ஆப்பிரிக்கரின் குடுமி இருக்கிறது. அஞ்சல் நிலையங்கள் வெள்ளையருக்கு மட்டும் தனிப்பகுதிகளில் உள்ளன. பூங்காக்களிலும் நீந்தி விளையாடுவதற்குரிய குளங்களிலும் இவ்வாறு நிறவேறுபாடு விளங்குகிறது. தொலைபேசியில் பேசுவதற்கும் ஐரோப்பியர்க்கும் 'ஆப்பிரிக்க ஆசியர்க்கும் தனிக்கருவிகள் பொருத்தப்பட் டுள. மின் தூக்கிகளும் (லிப்ட்) இவ்வாறே தனித்தனி யாக உள்ளன. நம் நாட்டில், இன்னும்கூடச் சில இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணீர் குடிக்கத் தனிக் குவளைகள் இல்லையா? அப்படித்தான் இவையும். க்