உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடு ஆப்பிரிக்கா.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 வளம் மலாவியின் பெரிய உற்பத்திப் பொருள் தேயிலை. ஆண்டுதோறும் 16,000 டன் தேயிலை உற்பத்தி யாகிறது. (இந்தியாவில் தேயிலை உற்பத்தி மூன்றரை லட்சம் டன்) நகரங்கள் அரசு அலுவல்களுக்கு ஒரு தலைநகரமும் வணிகத் துக்கு ஒரு பெரு நகரமும் உள்ளன. மலாவியின் பெரிய ஆறு சிரே. இது ஜம்பேசியின் துணை ஆறு. காவேரி ஆற்றின் கரையில் திருச்சியும் திருவரங்கமும் அமைந்திருப்பதுபோல, சிரே ஆற்றின் கரையில் பிளான்டயரும் லிம்பேயும் இருக்கின்றன. இந்த இரட்டை நகரம் வெளிநாட்டு விமானங்கள் சந்திக்கும் இடமாகவும் இரயில் போக்குவரத்தின் தலைமை இடமாகவும் விளங்குகிறது. மக்கள் தொகை ஒரு லட்சம். புகையிலை ஏலம் இங்கு நடைபெறுகிறது. சிமிண்டு ஆலையும் மரவேலைத் தொழிற் சாலைகளும் இங்குள்ளன. மலாவியின் இப்போதைய தலைநகரம் சோம்பா. ஆனால் புதிய தலைநகரம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. மலாவியின் உணவுக் களஞ்சியமாயும் தொன்மை நாகரிகத்தின் இருப்பிடமாயும் மராபி என்னும் பகுதி உள்நாட்டில் இருக்கிறது. உணவுப் பொருள்களை உற்பத்தி செய்தாலும் பிறதுறைகளில் இப்பகுதி முன்னேற்றமடையவில்லை. ஆகையால் இப் பகுதியில் தலைநகர் உண்டாக்கப்படுகிறது. புதிய தலைநகரின் பெயர் லிலோன்வி.