25 சிவகங்கையிலிருந்து மேற்கே 21 கி.மீ. தொலைவிலுள்ள கீரனூரில் லெட்பென்சில்களும் பெயிண்டுகளும் செய்ய உதவும் கிராபைட் படிவமுள்ள பாறைகள் உள்ளன. பெட்ரோல்: தொண்டி தேவகோட்டைப் பகுதி களில் பெட்ரோல் இருக்கக்கூடுமென, பூர்வாங்க ஆராய்ச்சிகளிலிருந்து தெரிகிறது.* இல்மனைட்டுச் இல்மனைட்: கடற்கரையூர்களில் சத்துள்ள மணல் உளது. இராமேசுவரத் தீவின் வடகரை யில் 400 டன் இல்மனைட்டும் 1200 டன் கார்னட்டும் இருப்பதாக ஆராய்ச்சியாளார் கூறுகின்றனர். இரும்புக்கனி : கானாடு காத்தானிலிருந்து 8கி.மீ. தொலைவிலுள்ள வாடிக்குடிப்பட்டியில் இரும்புக் கம்பி கள், கடப்பாறைகள் முதலியன செய்ததாகவும் அங்கு இரும்புக் கனிகள் சிறிதளவு இருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. மக்னீசைட்டு: மக்னீசைட்டிலிருந்து மங்கனீசி யத்தை பிரித்து எடுக்கும் தொழிற்சாலை காரைக்குடி யில் உளது. நிலக்கரி: காரைக்குடிக்கு அருகே மாநகரியில் நெய்வேலியில் கிடைப்பதைவிட உயர்ந்த தரமான பழுப்பு நிலக்கரி 1963-இல் கண்டுபிடிக்கப்பட்டது. பல
- It is also possible that a narrow belt stretching
from Tondi (near Devakottai) to Cuddalore in South Arcot may possess oil-bearing marine rocks or non- marine rocks that may contain oil. -2 -Geological and Magnetic Survey Studies, THE HINDU, Nov. 31963.