31 மாக, ஆலை அரசர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றுள் சில ஜப்பானியராலும் ஆங்கிலேயராலும் 19-ஆம் நூற்றாண்டில் தொடங்கப் பெற்றவை. சிலைமானில் சிறு அளவில் எகிப்திய நீண்ட இழைப் பருத்தி பயிரிடப்படுறது. மிளகாய். சாத்தூர், இராமநாதபுரம் வட்டங்கள் மிளகாய்க்குப் புகழ் பெற்றவை. ஸ்ரீவில்லிபுத்தூர். அருப்புக்கோட்டை, பரமக்குடி வட்டங்களிலும் காய் பயிராகிறது. மிள இம்மாவட்டத்து உழவர், மிளகாய்ச் சாகுபடியில் உப்பு உரத்தையும் புண்ணாக்கையும் நன்கு பயன்படுத்து கின்றனர். மிளகாய், பஞ்சு, புளி முதலிய பொருள்களுக்கு விருதுநகர் ஒரு பெரிய சந்தை. கடற் பாசி: இம்மாவட்டத்தின் கடலோரப்பகுதிகளிலும் பல தீவுகளிலும் கொத்துக் கஞ்சிப் பாசி, தட்டைக் கஞ்சிப் பாசி, தட்டைக் கொத்துக் கஞ்சிப் பாசி, கருப்புப் பாசி, பவளக் கஞ்சிப் பாசி எனப் வகைப் பாசிகள் கிடைக்கின்றன. இவற்றைப் பலமுறை கழுவிக் காய வைத்து, காற்றோட்டமுள்ள கூடைகளில் போட்டிருந்து பிறகு சுத்தப்படுத்தி வெள்ளையாக்கப் பட்ட பாசிகளை மறுபடியும் மும்முறை தண்ணீரில் அலசி ஆட்டுக்கல்லில் அறைக்க வேண்டும். பின்னர் இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து; மாவாக அறைத்து வடிகட்டி பல வகையான ஜெல்லி களைச் செய்யலாம். கடற் பாசிகளுடன் வனில்லா; ஸ்டிராபெரி, அன்னாசிப் பழம் முதலிய பொருள்களும் கேசரிப் பவுடரும் சர்க்கரையும் எலுமிச்சம்பழச் சாறும்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/63
Appearance