உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 என்ற அடிப்படையில்தான் தொழிற்சாலைகள் நிறுவப் பெற்றன. எல்லா மாவட்டங்களிலும் எல்லாத் தொழிற்சாலை களும் இருக்கவேண்டும். இலாபம் கிடைக்காவிட்டால் என்ன? நஷ்டம் வந்தாலும் அரசாங்கப் பணம் தானே? என்பன புதிதாக நாட்டில் உருவாகி வரும் கருத்துக்கள், வேளாண்மைச் சார்புத் தொழில்கள் : . உயிர் (1) பஞ்சு: உழவு, இம்மாவட்டத்தின் நாடியான தொழில். சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டங்களும், அருப்புக்கோட்டை வட்டத்தின் ஒரு பகுதியும் பருத்தி பயிரிடுவதற்கேற்ற கரிசல் மண் பூமியாக இருக்கின்றன. தெலுங்கு பேசும் நாயுடு. ரெட்டியார், ராஜா ஜாதியினர் பருத்தி பயிரிடுவதில் தலைசிறந்து விளங்குகிறார்கள். பருத்தியை வாங்கித் தரம் பிரிப்பதிலும் கொட்டையை நீக்குவதற்காக அறைப் பதிலும் அவர்களுக்கு ஒருவரும் இணையில்லை. இந்தத் தொழிலில் சாத்தூர், இராஜபாளையம், விருதுநகர் நகரங்கள் மிகவும் முன்னேறியுள்ளன. இம்மாவட்டத்தில் பருத்தி அறைக்கும் அறைக்கும் தொழிற் சாலைகள் (Ginning Factoreis) நாற்பது உள்ளன. ஒரு நூற்றாண்டுக்கு முன் ஆங்கிலேயரும், ஜப்பானியரும் இவற்றில் சிலவற்றைத் தொடங்கினர். அந்நாளில் தூத்துக்குடித் துறைமுகத்திலிருந்து இராமநாதபுர மாவட்டத்துப் பஞ்சு அனுப்பப் பெற்று இங்கிலாந்திலும் ஜப்பானிலும் துணி ஆக்கப் பெற்று விற்பனைக்கு இந்தி யாவுக்கு வந்தது. இப்போது இராமநாதபுர மாவட்டத்துப் பஞ்சு இம்மாவட்டத்து நூல் ஆலைகளுக்கும் பயன்படுகிறது. மதுரை, கோயமுத்தூர் மாவட்டங்களிலுள்ள ஆலைகளும்