உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 பொருள், மாத்திரைகள் செய்தல், பழம், மீன், இறைச்சி இவைகளைப் பதப்படுத்தும் துறையிலும் பயன்படுகிறது. அகர் கெல் (Agar-gel) என்ற பொருளை தூரியப் பொடி (Powdered Graphite)யுடன் சேர்த்தால் டங்ஸ்டன் வயர் கள் (Tungsten Wire) செய்யலாம். ஆல்கினேட் என்ற பொருளானது, ஜெல்லிகள் பழச்சாறு (Fruit- Squash) செய்ய உதவுகிறது. மண்டபம் பகுதியில் கிடைக்கும் கடற்பாசியைக் கொண்டு மதுரையில், குஜராத்தியர் உணவுப் பொருள்களைச் செய்து வருகிறார் கள். இத்தொழிற்சாலையைப்பற்றி மதுரை மாவட்ட நூலில் கூறுவோம். சிறு கப்பல்களைப் பழுது பார்க்கும் தொழிற்சாலை மண்டபத்தில் இயங்கி வருகிறது. மண்டபம், தொண்டிப் பகுதியில் சிறு படகுகளும் மீன் பிடிப்பதற்குரிய படகுகளும் பல தலைமுறைகளாகக் கட்டப்பட்டு வருகின்றன. (5) பனை ஓலைப் பொருள்கள் : இது பனைமரங்கள் நிறைந்த மாவட்டம். பனை ஓலையிலிருந்து பொம்மை களையு ம் ஓலைப் பெட்டிகளையும் இம்மாவட்டத்தார் கவர்ச்சியாகச் செய்கின்றனர். இன்னொரு வகையான பொம்மைகளும் இம்மாவட் டத்தில் செய்யப் பெறுகின்றன. காப்பிப் பொடி மிளகாய்ப் பொடி, நல்லெண்ணெய் ஆகியவற்றை அடைக்க விருதுநகரில் தகர டப்பாக்கள் செய்கின்றனர் அவற்றை வெட்டும்போது மீதமாகும் தகரத் துண்டு களால், விளையாட்டாகப் பொம்மைகள் செய்தனர். பொழுது போக்குக்காகச் செய்த இப்பொம்மைகள் இப்போது தொழில் முறையில் செய்யப் பெறுகின்றன.