உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 இத்தகைய அபூர்வமான ஆராய்ச்சி செய்யும் நாடுகள் ஒன்றிரண்டே. அவர்களுடைய அறிவு வெளி நாட்டா ருக்குப் பயன்பெற அவர்கள் விரும்பவில்லை. சிதம்பர் ரகசியமாக அவர்கள் வைத்துக்கொள்ள விரும்பு கின்றனர். எவ்வித வெளிநாட்டுக் கூட்டுறவும் இன்றி, காரைக்குடியில் இந்தத் தொழிற்சாலை இயங்குகிறது. மூன்று லட்சம் ரூபாய் மூலதனத்தில் சோதனைத் தொழிற்சாலையாக, திரு.காமராஜ் இதைத் தொடங்கி வைத்தார். இந்த ஆலை இப்போது விரிவாக்கப் பெற்று முப்பது லட்சம் ரூபாய் மூலதனத்தில் வணிக நிறுவனமாக மாற்றம் பெறுகிறது. ஜாம்ஷெட்பூரில் ஏற்கெனவே மக்னீசியம் தயாரிப்பு ஆலை உள்ளது. அங்கே தயாரிப்பு முறை வேறு. ஜாம் ஷெட்பூர் ஆலை தேசிய உலோகப் பொருள் பரிசோதனைக் கூடத்தாரால் நடத்தப்படுகிறது. அங்கு உற்பத்தி ஓராண்டுக்கு 250 டன். காரைக்குடி மின் இரசாயன ஆய்வுக் கூடத்தினர் மின் இயல் இரும்புத்தூள் தயாரிப்பு முறையைக் கண்டு பிடித்துள்ளனர். இவ்வாறு தயாரிக்கும் தொழிற்சாலை காரைக்குடி தொழிற்பேட்டையில் உள்ள செட்டிநாடு எலக்ட்ரோ கெமிக்கல்ஸ். பொறியியல் தொழில்கள் : எஃகு விருதுநகரில் 1960-ஆம் ஆண்டு அளவில் உருட்டு ஆலை (Steel Rolling Mills) தொடங்கப் பெற்றது. அவர்களுக்கு வேண்டிய மூலப் பொருளாகிய Billets கட்டுபடியான விலையில் கிடைக்கவில்லை. Re-rollable Scraps விலையும் வட இந்தியாவிலுள்ள விலையைவிட ஒரு டன்னுக்கு 120 ரூபாய் கூடுதலாகக்