11. தமிழ்ப் பணி சங்க காலத்திலிருந்து இன்று வரை தமிழின் வாழ் வுக்கும் வளத்துக்கும் அயராது உழைத்த, உழைத்து வருகிற பெருமக்கள், தொண்டர்கள், புலவர்கள், புரவலர்களை இம்மாவட்டம் தந்திருக்கிறது. வள்ளல்கள்: g பாரிவள்ளல் காலம் தொட்டு வாழையடி வாழை யாக வள்ளல்கள் வாழ்ந்து வரும் மாவட்டம் இது. இத்தகைய வள்ளல்களுள் கடந்த இரண்டு நூற்றாண்டு களுள் குறிப்பிட்டத்தக்கவர் பலர். சேதுபதிகள்: சேதுபதிகள் தமிழ் வளர்ப்பதையே தங்களுடைய முக்கிய பணிகளுள் ஒன்றாகக் கொண்டிருந்தார்கள். முத்துராமலிங்க சேதுபதி, பாஸ்கர சேதுபதி ஆகி யோரின் தொண்டும் தமிழ்ப்பற்றும் தமிழ் இருக்கும் வரை நினைத்துப் போற்றப்படும். 1785-இல் காலமான பெரும் புலவர் சிவஞான சுவாமிகள். அவருடைய மாணவரான், இராமநாதபுரம் சோமசுந்தரம் பிள்ளை சேது சமஸ்தான வித்துவானாக இருந்தார். அவரிடம் பயின்று தமிழ் வளர்த்த பெரும் புலவர்கள் அஷ்டாவதானம் பெரிய சரவணக் கவிரா யரும் இயற்றமிழ் ஆசிரியர் முகவை இராமநுசக் கவிரா யரும் ஆவர். பின்னவர்களிடம் பயின்றவர்களே திருத் தணிகை விசாகப் பெருமாளையர், திருத்தணிகை சரவ ணப் பெருமாளையர், டாக்டர் ஜி.யு. போப் ஆகியோர்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/188
Appearance