லாம். 376 கருமொழி சானான்வயல், தளக்காவயல், தானா வயல், திருமணவயல், தென்னீர்வயல், நெல்வயல், வெட்டிவயல், ஆறாவயல். இப்பகுதியில் கிறித்தவர்களுக்கு முக்கியத்தலங் களான சருகணியும், புளியாலும் உள்ளன. ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் கண்டதேவி, திருவேகம்பத்து என்ற ஊர்களும் முருகனைக்குறிக்கும் சண்முகநாதபுரம், திராணி ஊராட்சி மன்றத்தைச் சேர்ந்த சண்முகநாத பட்டணம், உறுதிக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த குமாரவேலூர் என்ற சிற்றூர்களும் இருக் கின்றன எழுவன் கோட்டையிலுள்ள ஐயனார், மதுரை மாவட்டத்து வலையர்களுக்கும் வழிபடு தெய்வமாக இருக்கிறது. அவர்கள் இந்த இறைவன் பெயரால் எழுவன் என்று பெயர் வைக்கின்றனர். வெள்ளிக்கட்டி, என்மணக்குடி என்ற ஊர்களின் பெயர்கள் ஆராய்ச்சிக்குரியன. இவ்வொன்றியத்தி லுள்ள சண்முகநாத பட்டணம், சீனமங்கலம், குமார வேலூர், எஸ். சொக்கநாதபுரம், ஆரவங்குடி போன்ற ஊர்களில் வாழும் செட்டியார்கள் வெளிநாட்டு வாணிகத் தொடர்புடையவர்கள். இவர்களுக்குப் பொதுவான பிரபலமான சிவன்கோவில் எஸ். சொக்க நாதபுரத்தில் அவவூர் நகரத்தார்களால் கட்டப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வூரைச் சேர்ந்த திரு. ஆதிநாகப்பன் பினாங்கில் 'ஜெய்ஹிந்த்' வார இதழ் ஆசிரியராயும், கோலாலம்பூரில் 'தமிழ்நேசன்' ஆசிரியராயும்,லண்டனில் தமிழ்ச் சங்கத் தலைவராயும் இருந்திருக்கிறார். இவர் மலேயா அரசில் பட்டங்களும் பதவிகளும் பெற்றிருக்கிறார். சென்னையில்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/378
Appearance