உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

877 1968-இல் நடந்த உலகத்தமிழ் மகாநாட்டிற்கு மலேசியா அரசு தூதுக்குழுவின் தலைவராக இருந்தார். சருகணி: ே தவகோட்டை, சிவகங்கை, திரு வாடானைச் சாலைகள் சந்திக்குமிடத்தில் இவ்வூர் அமைந் திருக்கிறது. கத்தோலிக்கருக்கு, சருகணி ஒரு மாவட்டமாக இருந்துவருகிறது. 1736-இல் இங்கு போர்த்துக்கல் நாட்டுப் பாதிரிமார்கள் வந்து கிறித்தவ சமயத்தைப் பரப்பினர். 1751-இல் தேவாலயம் கட்டப்பெற்றது. அதன் சுவர்களின் கனம் ஐந்து அடி என்பதிலிருந்து எவ்வளவு பக்காவாக அது கட்டப்பட்டது என்பதை அறியலாம். நாடார்கள், உடையார்கள், வேளாளர், கோனார், அகம்படியர் ஆகியோர் நெடுந்தூரத்தி லிருந்தும் வெளிமாவட்டங்களிலிருந்தும் மதமாற்றி இங்கு குடியேற்றப்பட்டனர். இப்பகுதியைச் சேர்ந்த மறவர், பள்ளர், ஆதி திராவிடர்களும் இந்த மதத்தைத் தழுவினர். 1929-ஆம் ஆண்டில் புதிய தேவாலயம் கட்டப் பட்டது. கல்வி, மருத்துவ நிலையங்களும் ஏற்படுத்தப் பட்டு நன்கு இயங்கி வருகின்றன. தட்டெழுத்து சுருக் கெழுத்துப்பள்ளியும் தொடங்கப்பெற்றிருக்கிறது. (1) The feast of St. Francis Xavier (2) The feast of Most sacred Heart of Jesus and Immaculate Heart of Mary-Titular என்ற கின்றன. இரு விழாக்கள் ஆண்டுதோறும் நடைபெறு -24