381 பிற சிறு தொழில்களும் உள்ளன. சிங்கம்புணரியிலும் தொழிற் சாலைகள் ஏற்பட்டு வருகின்றன. இவ்வட்டத்தினர் வழக்காடுவதில் வல்லவர்கள். மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் முன்சீப் கோர்ட்டு ஏற்பட்டு அந்தந்த வட்டத்து வழக்குகள் அவ்வட்டத்திலேயே விசாரிக்கப்படுகின்றன. திருப்பத் தூர்வட்டத்தின் சில ஊர்களுக்குத் தேவகோட்டைலும், ஏனைய ஊர்களுக்குச் சிவகங்கையிலும் வழக்குகள் விசாரிக்கப் படுகின்றன. வட்டத்திற்குள்ளேயே தனி முன்சீப் கோர்ட்டு ஏற்படுத்த அரசினர் முன்வர வேண்டும். இவ்வட்டத்தில் காரைக்குடி நகராண்மைக் கழக திருப்பத்தூர், சிங்கம்புணரி, சாக்கோட்டை, கல்லல் ஊராட்சி ஒன்றியங்களும் உள்ளன, மும் காரைக்குடி: இது செட்டிநாட்டின் பெரியநகரம்; திருச்சி, மானாமதுரை, அறந்தாங்கி ஆகிய மூன்று திக்கு களில் செல்லும் இரயில்களின் சந்திப்பு. இந்நகரின் மக்கள் தொகை 40,000. நகர் எல்லைகளைக் குறிப்பிட 'ஆர்ச்' வளைவுகள் போட்டிருப்பது இந்நகரின் தனிச் சிறப்பு. காரைக்குடி என்னும் ஊர்ப்பெயர் காரைச் செடி யால் ஏற்பட்டது - கி.பி 1700க்கு முன் இந்நகர் காரைச் செடி முளைத்த காடாக இருந்தது.குழி ஒரு பணம், இரண்டு பணம் (பணம் - 6 புதுக்காசு) விலைக்கு காரைச்செடி முளைத்த இடங்களை வாங்கிச் செஞ்சையிலிருந்து நகரத்தாரும் பிறகு சேணியரும் குடியேறி முத்தாளம்மனையும் கொப்புடைய அம்மனையும் கொண்டு வந்து கோவில் கட்டினர்,
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/383
Appearance