383 உறுதியுடனும் செய்யப்பெற்ற பழைய சாமான்களை யும் விற்கும் வணிகர் பலர் இருக்கிறார்கள். தமிழ்ப் புத்தாண்டு அன்று, இசை நிகழ்ச்சிகளும் றைவழிபாடும் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன. இந்நகரின் நடுநாயகமாக இருப்பது கல்லுக்கட்டி, அது நாற்புரமும் கல்லால் கட்டப் பெற்ற குளம். கல்லுக் கட்டிக்கரையில் இவ்வூரினர் சிறப்பாகப் போற்றும் கொப் புடையம்மன் கோவில் இருக்கிறது. காதில் கொப்பு என்னும் அணி சிறப்பாக இருப்பதால் இவ்வாறு பெயர் ஏற்பட்டது. அருள் பொழிந்து நகர் காக்கும் நல் அன்னை கொப்புடையாள். இந்த அம்மனை உருவாக் கியவர் பல நூற்றாண்டுக்கு முன்னர் சிவகெங்கைச் சீமையை ஆண்ட மறவர்குலத்து மன்னர் ஒருவர். காரைக்குடி நகரின் தென்பால் விளங்கும் பழைய செஞ்சைப் பகுதியில் இந்த அம்மன் சிலையை கண்டார். அதற்கு இங்கு ஓர் ஆலயம் எழுப்பினார்.இறை என்ற ஒன்று பால்காரணமாக இறைவன்-இறைவி என்று இரண்டாயிற்று. இறைவன் ஒன்றாக இருந்து பிரமன் விஷ்ணு, சிவன் என்று மூன்று ஆயிற்று. அப்படியே இறைவியும் பிராமி, வைஷ்ணவி, சிவை என்று மூன்று ஆயிற்று இம் மூன்றில் சிவை என்பதற்கு பழங்காலத்தில் தமிழகத்தில் வந்த வழங்கி "கொற்றவை" என்பதாகும். பழந்திருப் பெயர் அப்பெயரே பிற்காலத்தில் துர்க்கை என்றாயிற்று. இக் கொற்றவைத் திருவுருவுக்குக் காதில் "கொப்பு" என்னும் அணி சிறப்பாக இருத்தல் மரபு. அம்மரபுப்படி மறக்குலத்து மன்னர் கண்ட அம்மைக்கும் காதில் கொப்புடையாள் என்னும் திருப் பெயர் ஏற்பட்டது.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/385
Appearance