உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முக்கியமான 309 சமூகத்தார்கள் என்று சொல்லுவது பொருந்தும். நாயக்கர் ஆட்சியில் ஏற்பட்ட கிருஷ்ணா புரம், ரெங்கப்ப நாயக்கன்பட்டி, ரெங்கபாளையம் என்ற சிற்றூர்கள் இவ்வொன்றியத்தில் உள்ளன. இவ்வொன்றியத்தில் 24 ரெவினியூ கிராமங்கள் ள்ளன. 28 ஊராட்சி மன்றங்கள் இயங்கிவருகின்ற னர். இவற்றுள் வற்றாயிருப்பு, சுந்தர பாண்டியம், கொடிக்களம், வ.புதுப்பட்டி நான்கும் பேரூராட்சிகள். மலைகள்: இவ்வொன்றியம் மலைவளம் மிகுந்தது. கிழக்கேயுள்ள மதுரை-ஸ்ரீவில்லிபுத்தூர்ச் சாலை தவிர ஏனைய மூன்று திக்குகளிலும் கொடிக்குளத்திலிருந்து கிருஷ்ணன் கோவில்வரை 16 கி.மீ. தொலைவுக்கு மேற் குத் தொடர்ச்சி மலை பரவியிருக்கிறது. இதன் ஒரு பகுதியான சதுரகிரி மலையின் உயரம் ஏறத்தாழ 3500அடி இருக்கலாம். மலைத் தொடர் தவிர சில குன்றுகளும் ஆங்காங்கே உண்டு. . ஆறு ஆறுகள்: மலைப் பகுதியிலிருந்து மழை நீரைக் கொண்டுவரும் ஆறுகள் இருக்கின்றன. இவற்றுள் குறிப் பிடத்தக்கன இரண்டு; இவற்றில் ஆற்றின் போக்கைக் காண இயலாது, ஆங்காங்குள்ள கண்மாய்களில் சேர்ந்து அவற்றின் நீர் செலவவாகிவிடுவதால், ஆறாக அவை காட்சி தருவதில்லை. இவ்வாறு மறைந்துள்ள கல்லணை அர்ஜுணா ஆறு, ஆறுகள் என்பன. அர்ஜுணா ஆறு வற்றாயிருப்பிலிருந்து தொலைவிலுள்ள அர்ஜுணாபுரத்தில் தோன்றி 20கி.மீ. தொலைவிற்கு இந்த ஒன்றியத்தில் மட்டும் பாய்ந்து கண்மாய்களில் கலந்துவிடுகிறது. கல்லணையாறு சாப்டூர் மலைகளில் தோன்றி 6 கி.மீ. நீளத்துக்குப் பாய்கிறது. ஏராளமான 'சிற்றாறுகளும்' இவ்வொன்றியத்தில் செல்லுகின்றன. 3கி.மீ.