உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536 மயில் அடை காப்பதாகவும், குஞ்சு பொரித்ததும் மயில் அதனைத் தன் சிறகுக்குள் வைத்துத் தாங்கிக்கொண்டு பறந்து செல்லும் என்றும், பொரித்த சிறு குஞ்சை நாம் கையால் தொட்டால் அல்லது பிடித்தால் அக்குஞ்சு இறந்துவிடும், சிறு அதிர்ச்சியைக் கூட அதனால் தாங்கிக் கொள்ள முடியாது என்றும் கூறுகிறார்கள். பிள்ளையார் தொட்டியங்குளம்: நேர்த்திக் கடனாகப் பிள்ளையார் திருவருவங்களைப் புதைக்கும் வழக்கம் இப் பகுதியில் நிலவுகிறது. இவ்வூரில் சில யார்கள் புதைந்து கிடக்கின்றன. . நூறு பிள்ளை நூறு சேதுபுரம், ரகுநாத மடை; இராமநாதபுரம் சேதுபதி களின் தொடர்பைக் குறிக்கும் ஊர்கள். திருவளர் நல்லூர் திருவிடை நல்லூர் என்பதன் மரூஉ. பூம்பிடாகை : பூமிநாதன் கோவில் இருக்கிறது பிடாகை - சமாதியுள்ள கோவில். அழகாபுரி முக்குளம் : அழகாபுரியை அடுத்த ஊர். முக்குலத்தோர் பெயரால் ஏற்பட்டது. 'முக்குலம் முக்குளம் என்று தவறாக விளங்குகிறது. பிற்சேர்க்கை அமைச்சர்கள் : (பக்கம் 166) ஸ்ரீ ஷண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி 1952 முதல் 1954 வரை ராஜாஜி அமைச்சரவையில் வீட்டு வசதி விளையாட்டுத் துறை அமைச்சராகவும், 1954 முதல் 1957 வரை காமராஜ் அமைச்சவையில் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை, மின்சார அமைச்ச ராகவும் பதவி வகித்தார். $