உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தாயிரம் குதிரை வீரருடன் மெதினாவிலிருந்து வட ஆப்பிரிக்கா எங்கும் சென்று அட்லாண்டிக் லோரத்தை அடைந்தாராம். கடலுக்குள் விரட்டினாராம். பிறகு, தம் கட குதிரையைக் அல்லாவே எங்கெங்கெல்லாம் இஸ்லாமிய மதத் தைப் பரப்ப முடியுமோ பரப்பிவிட்டேன். இனி பரப்ப இடமில்லையே. கடற்கரையையே அடைந்துவிட்டேன். இதற்கு நீயே சாட்சி. என்று கூறினாராம். 11ஆம் நூற்றாண்டு 11-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் தென் பகுதிகளிலுள்ள சில நாடுகளில் இஸ்லாம் பரவிற்று. இதன் விளைவாக மத்தியதரைக்கடல் இஸ்லாமியரின் கடலாகக் காட்சியளித்தது. 15-ஆம் நூற்றாண்டில் ஸ்பெயினில் இஸ்லாமிய சமயம் வலுவிழந்தது. அல்ஜீரியாவிலும் டுனீசியாவிலும் சில துறைமுகங்கள் ஸ்பெயின் வயப்பட்டன. மொராக்கோவில் போர்த் துக்கல் நாட்டின் செல்வாக்குப் பெருகிற்று. ஐரோப்பா வுக்கும் வட ஆப்பிரிக்காவிக்குமிடையே வாணிகம் விரிந்தது. 1518 முதல் 1830 வரை வட ஆப்பிரிக்காவில் துருக்கியின் செல்வாக்கு மிகுந்தது. பெருகின. ஆட்சியின் தரம் குறைந்தது. பிரெஞ்சுத் தொடர்பு திருட்டுக்கள் 18-ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு வணிகர் மக்ரிப் துறைமுகங்களுக்கு வந்தனர். வணிகத் தொடர்பால் பொருள்களை விற்பவரும் வாங்குபவருமாகப் பிரெஞ் சுக்காரரும் மக்ரிப் நாட்டவரும் இருந்தனர். இந்த