உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேனலைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Tackl தேனலைகள் அரசன் எவ்வழியோ அவ்வழியே குடிகளும் ஆகிட வேண்டுமென ஆட்சி ஆணை பிறப்பித்தது. சைவத்துக்கு எதிராகச் சிறு துரும்பும் அசையக் கூடாது-குலச்சிறை கொக்கரித்தான். அரசியும் அப்படியே! பாண்டியனோ கூனனாகிவிட்டான்; கொள்கை பிறழ்ந்தது! இந்நிலையில் தமிழகம் இருக்கின்ற வேளையில் ஒரு நாள் !.. க படை முகத்து வீரனவன்; படைக்கலனைப் பார்வையிலும் பால் நிலவு முகத்தினிலும் பெற்றி ருக்கும் பாவை அவள் ! ஆணொருவன் பெண் ணொருத்தி யென்றால் அங்கே காதலுக்குக் கதவு மூடியா இருக்கும்! நலங்கிள்ளி — அந்த நல்ல தமிழ் இளைஞனுக்குப் பெற்றோர் இட்ட பெயர் ! பேரழகியோ பீலிவளை யென்னும் பெயர் பெற்றாள்! சந்தித்தார்....சிறிது சிந்தித்தார்....... முந்தித் தருவது யார் முத்தம் எனும் விதத்தில் வளர்ந்து விட்டார். "பந்திப் பார்ப்பனரின் வயிறு போல் பொற்கிழி வேண்டாம் - அந்திச் செவ் வானத்து எழில் காட்டும் கன்னம் தருவேன் அட்டியின்றி! ஆனாலும் அத்தான், குந்திக்குத் தங்கைகளாம் குலக்கணிகையர் மரபினிலே வந் தாலும் மந்தி கை-மாலையாய் மாற மாட்டேன் இஃதுறுதி" யென்று சொல்லி 'இச்' சென்று பேச்சை முடித்திட்டாள் சித்திரச் செந்தமிழாள் பீலிவளை ! 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேனலைகள்.pdf/20&oldid=1687370" இலிருந்து மீள்விக்கப்பட்டது