உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேனலைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி கையில்! .... இன்ப விருந்துண்டு இரவெல்லாம் கழிப்போம்....' முல்லை பாடினாள் நிலவு நோக்கி....... புரவி யொன்று வேகமாகத் தலைவாயில் பக்கம் வருவது அவரேயென்று கூவினாள். ஆவி நிகர் ஆளனுக்குப் பதிலாக அவன் தந்த ஓலை கொண்டு தூதன் வந்தான். அதில்; கண்டாள். 66 தமிழே! தண்பொழிலே !........ கடாரத்தில் படையெடுப்பு! கடல் கடந்து செல்லுகின்றேன். உடல் மெலிந்து வாடாதே... ஓராண்டில் திரும்பு கின்றேன் ” - " என்ற எழுத்துக்களை நனைத்தாள் கண்ணீ ரால்!... கட்டிலிலே குப்புற வீழ்ந்துவிட்டாள் .... வீணாக்கி விட்டேனே நேற்றிரவை... விரலுக்கும் காலுக்கும் அழகு தேவையென்று விருந்துண்ண மறுத்தேனே - இனி ஓராண்டு யாருக்கு அழகு காட்ட இந்த மருதாணி தேவையென்று... கசக்கிக் காண்டாள், கைகளையும் கால்களையும் !.... இதுபோல நேற்றிரவே ஈர மருதாணியைக் கலைத்திருந்தால் அது கலைந்திருக்கும்..... கலவி நடந்திருக்கும். இன்று கலையுமோ?....... கலைய வில்லை!... 'ஓராண்டு!' எனச் சொல்லிக்கொட்டி விட்டாள் மழைக் கண்ணீர்!....அப்போது 'கலகல' சிரிப்புக் கேட்டு 'மளமள என எழுந்தாள் 53 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேனலைகள்.pdf/59&oldid=1687409" இலிருந்து மீள்விக்கப்பட்டது