உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேனலைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் : ஆண்டு விழா “ வக்கணைக்காரி ! இக்கணமே இந்தா முத்தம் ; எண்ணிக்கொள் - இந்தப் பேச் சுக்கு எந்தன் பரிசு!” 66 அவள்:- முத்தத்தால் முழு உடலும் கொதிப்பேறி இதயத்தின் ஏக்கமிகு சத்தத்தால் எந்தன் காதெல்லாம் செவிடுபடும் செயல் புரிந்து செல்லாதே. வேண்டாம்; என்னைத் தீண்டிக் குளிரேற்றிப் பின்னர் நடுக்கும் உடலுக்குப் போர்வையாய் உதவாமல் போய்விடுவாய்- வேண்டாம்; வேண்டாம்! அவன் :- 66 தீங்கனியே ! தீண்டுவதால் குளிர் என்றாய்; முன்பு தீப்போல் கொதிக்கு மென்றாய் உந்தன் மேனி-இதில் எதை நான் நம்புவது ? ” 66 அவள் :- குளிர் பொழிகின்ற நிலவி னுக்கு வெப்பமுண்டாம் அதுதான் குறள் முழக்கும் மூன்றாம் பாலினுக்கும் முழுப் பொருத் தம் ! ” அவன்:-- உன்னைக் கைப்பிடித்து ஒரு கிழமை ஊமையாய்க் கிடந்தாய்-ஆண்டு ஒன்று முடிவதற்குள் அனைத்துலகும் வெற்றி கொள்ளும் கனிப் பேச்சு கொட்டுகின்றாய்! அவள் : - 86 இன்னும் என்னை ஊமையாய்ச் செய்வதற்கு ஒரு வழி உண்டத்தான் அவன்:- "என்ன கண்ணே? 101

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேனலைகள்.pdf/107&oldid=1687457" இலிருந்து மீள்விக்கப்பட்டது