________________
2. - உ நூலாசிரியர்கள் வரலாறு. -குமட்டூர்க்கண்ணனார்:-இவர் இமயவரம்பன் நெடுஞ்சேர லாதன்மீது இந்நூல் 2-ஆம் பத்தைப்பாடி, உம்பற்காட்டு ரூ00 - ஊர் பிரமதாயமும் ங - வருடம் தென்னாட்டுள் வருவதனிற் பாகமும் பரிசிலாகப்பெற்றவர் ; அந்தணவருணத்தினர்; இது, பிரமதாயம் பெற்றனரென்பதனால் தெரிகின்றது. கண்ணனாரென்று ஒருபுலவ ருள; அவரின் வேறுபடுத்தற்கு இவர் இங்ஙனம் வழங்கப்பெற்றார். ௩. பாலைக்கௌதமனார்:-பல்யானைச்செல்கெழு குட்டுவன் பீது இந்நூல் ௩ - ஆம்பத்தைப் பாடியவராகிய இவர், அவனை இரந்து அவனுதவியால், ஒன்பது பெருவேள்விவேட்டுப் பத்தாம்பெருவே ள்விவேட்கையில் மனைவியுடன் சுவர்க்கம்பெற்றவர் ; அந்தணவரு ணத்தினர். இவை, இப்பத்தின்பதிகத்தாலும், "தொடுத்தபெரும் புலவன்" (ஙகசு) என்னும் பழமொழி வெண்பாவாலும் அதனுரை யாலும், "நான்மறை யாளன் செய்யுட் கொண்டு, மேனிலை யுலகம் விடுத்தோ னாயினும்" (உஅ-ஆம் காதை, க௩எ அ) என்னும் சிலப் பதிகாரத்தாலும், "இதில் இமயவரம்பன் தம்பி பல்யானைச்செல்கெழு குட்டுவனைப் பாலைக்கௌதமனார் துறக்கம்வேண்டினாரென்பது குறி ப்புவகையாற் கொள்ளவைத்தலின், இது வஞ்சிப்பொருளில் வந்த பாடாணாயிற்று" (தொல். புறத். உரு-ஆம் சூ. உரை) என்னும் நச்சினார்க்கினியத்தாலும் விளங்குகின்றன. கோதமனாரென்று ஒரு புலவருளர்; அவரின் வேறுபடுத்தற்கு இவர் இங்ஙனம் வழங்கப் பெற்றார். இவர் சுவர்க்கம்பெற்ற சரிதை மலைநாட்டிற் கர்ண பரம்பரையில் இக்காலத்தும் வழங்குகின்றது. ச.- :-இவர் ச. காப்பியாற்றுக்காப்பியனார்:- இவர் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலென்னும் அரசன்மீது இந்நூல் ௪-ஆம்பத்தைப்பாடி நாற்பது நூறாயிரம் பொன்னும் அவன் ஆண்டதிற் பாகமும் பரிசி லாகப் பெற்றவர். ரு. பரணர் - இவர் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் மீது இந்நூல் ரு-ஆம் பத்தைப்பாடி, அவனால் உம்பற்காட்டுவருவாயை