உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

க பதிற்றுப்பத்து, (க) பிறழ்நவெனவும் (உ) வித்துநவெனவும் (ச) தடுக்குநவெனவும் (ச) ஆர்நவெனவும் வந்தன வினைப்பெயர்த் திரிசொல். தன் ௩௪. நெய்தல் எருமையின் நிரை தடுக்குநவுமென்றது நெய்த லானது அக்கரும்புமுதலாய மற்றோரையின் பாங்கரிற் செல்லாது னையேநின்று தின்னும்படி தான் போதவுண்ட எருமைநிரையைத் தடுக்கு மிடங்களுமென் றவாறு, இச்சிறப்பானே இதற்குப் 'பூத்தநெய்தல்' என்று பெயராயிற்று. மூதா ஆம்பலார்நவுமென்றது புறத்துப்போய் இரைதெவிட், டாத முதிய ஆக்கள் (ரு) துணங்கையாடிய இடத்துநின்று ஆம்பலையே தின்னுமிடங்களுமென்றவாறு. என்றது, பெருக ஆம்பல்சூடித் துணங்கையாடுவாரையுடையன வென அவ்விடங்களின் செல்வச்சிறப்புக் கூறியவாறாயிற்று. விக்க. எ. இமிழ்மருதென்றதற்குப் புள்ளிமிழ்மருதென்று ஒரு பெயர்வரு புனல்வாயில் -வாய்த்தலை. கக0. ஒலிதெங்கென்னும்பெயர்க்கு முன்னின் ற பெயர்கள் எண்ணும்மையோடு நின் றமையால் அவற்றையுடைய நாடென ரண் டாவதன் தொகையாய் அச்சொல் அவற்றையெல்லாம் எழுவாயாக்கி நாட் டிற்கு அவ்விடங்கள் சினையாகலின், நாடு கவினழியவென்னும் முதற்பய னிலையோடு வழுவமைதியாக முடிக்க. க0 - கக, கூற்றடூஉ நின்றயாக்கைபோல நாடுகவினழியவென மாறிக்கூட்டிக் கூற்றுவனாலே கொல்லப்படாநின்ற யாக்கை ஒருகாலைக் கொருகால் அழகழியுமாறுபோல நாடு அழகழியும்படியெனவுரைக்க. வினை இனி மாறாதே போலும்படியெனப் போலவென்பதனை யெச்ச நீர்மையாக்கிப் போல்கின்றது மேல்வருகின்ற பாக்கமாகவுரைப்பினு மமையும். இனிக் கூற்றுவனை அட்டுநின்ற யாக்கையையுடையானொருவன் உளனாயினும் அவனைப்போல நீ சிவந்தென்றுரைப்பாருமுளர். கஉ. நீரழிபாக்கமென்றது வெள்ளத்தான் அழிவுபடினல்லது பகை வரான் அழியாத பாக்கமென்றவாறு. பாக்கமென்றது, நெய்தனிலத்து ஊர்க்கேயன்றி, "கட்கொண்டிக் குடிப்பாக்கத்து, நற்கொற்கை' (மதுரைக்காஞ்சி, க௩ எ-க௩.அ ஆம் அடி கள்) என்று வந்தமையான் ஒரோவழி அரசனிருப்புக்குப் பெயராமாகவின் ஈண்டுப் பாக்கமுடைய பேரூர்களெனப்பட்டது. கச. உடைபோகவெனத் திரிக்க. மன்றத்து உள்ளம் அழிய ஊக்குநர் மிடல் தபுத்து