உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரண்டாம் பத்து. (பதிகம்) மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி யின்னிசை முரசி னுதியஞ் சேரற்கு வெளியன் வேண்மா ணல்லினி யீன்றமக னமைவர லருவி யிமையம் விற்பொறித் திமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத் தன்கோ னிறீஇத் தகைசால் சிறப்பொடு பேரிசை மரபி னாரியர் வணக்கி நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து நெய்தலைப் பெய்து கைபிற் கொளீஇ யருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு பெருவிறன் மூதூர்த் தந்துபிறர்க் குதவி யமையார்த் தேய்த்த வணங்குடை நோன்றா உங ளிமையவரம்ப னெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க்கண்ணனார் பாடினார்பத்துப்பாட்டு. அவைதாம்: புண்ணுமிழ்குருதி, மறம் வீங்கு பல்புகழ், பூத்தநெய்தல், சான்றோர்மெய்ம்மறை, நிரையவெள்ளம், துயிலின்பாயல், வலம்படுவியன்பணை, கூந்தல்விறலியர், வளனறு பைதிரம், அட்டுமலர்மார்பன். இவை பாட்டின்பதிகம். பாடிப்பெற்றபரிசில்: உம்பற்காட்டு ஐஞ்ஞூறூர் பிரமதாயங்கொ டுத்து முப்பத்தெட்டியாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகங் கொடுத் தான் அக்கோ. தான். இமயவரம்பனெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டியாண்டு வீற்றிருந் இரண்டாம்பத்து முற்றிற்று.