உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மூன்றாம் பத்து. (பதிகம்) இமைய வரம்பன் றம்பி யமைவர வும்பற் காட்டைத் தன்கோ னிறீஇ யகப்பா வெறிந்து பகற்றீ வேட்டு மதியுறழ் மரபின் முதியரைத் தழீஇக் கண்ணகன் வைப்பின் மண்வகுத் தீத்துக் கருங்களிற் றியானைப் புணர்நிரை நீட்டி யிருகட் னீரு மொருபக லாடி யயிரை புரை இ யாற்றல்சான் முன்போ டொங்கா நல்லிசை யுயர்ந்த கேள்வி நெடும்பார தாயனார் முந்துறக் காடுபோந்த சங பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக்கௌதமனார்பாடி னார் பத்துப்பாட்டு. அவைதாம்: அடுநெய்யாவுதி, கயிறுகுறு முகவை, ததைந்தகாஞ்சி, சீர்சால்வெள்ளி, கானுணங்குகடுநெறி, காடுறுகடுநெறி, தொடர்ந்தகுவளை, உருத்துவருமலிர்நிறை, வெண் கைமகளிர், புகன்றவாயம். இவை பாட்டின்பதிகம். பாடிப்பெற்றபரிசில் : 'நீர் வேண்டியதுகொண்மின்' என, 'யாலும். என்பார்ப்பனியும் சுவர்க்கம்புகல்வேண்டும்'என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெருவேள்வி வேட்பிக்கப் பத்தாம்பெருவேள்வியிற் பார்ப் பானையும் பார்ப்பனியையும் காணாராயினார். இமயவரம்பன்றம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன் இருபத்தை யாண்டு வீற்றிருந்தான். மூன்றாம்பத்து முற்றிற்று