________________
காகா 2. F. பதிற்றுப் பத்து. துறை - காட்சிவாழ்த்து. வண்ணமும் தூக்கும் அது. பெயர் - (ச) உரைசால்வேள்வி. பலர் தில்லென்புழி,தில், ஒழியிசை. உரைசால்வேள்வியென்றது யாகங்கள் எல்லாவற்றினும் பெரிய வும் அரியவுமாக உரையமைந்த வேள்வியென்றவாறு. எ, இச்சிறப்பானே, இதற்கு 'உரைசால்வேள்வி' என்று டெய்ராயிற்று. களிறு நிலைமுணவுதற்குக்காரணம் (சு) இருஞ்சேறாடுதல். தாரருந்தகைப்பென்றது ஒழுங்குபாட்டையுடைய ஆண்டுவாழ்வார்க் கல்லது பிறர்புகுதற்கரிய மாளிகைக்கட்டணமென்றவாறு. தார் - ஒழுங்கு. தகைப்பு - கட்டணம். அ. புறஞ்சிறை - அதன்சிறைப்புறம். எஃகுபடை - கூரியபடை. க0. பாண்டில் - தேர்பூணும் எருதுகள். அ-க0. புறஞ்சிறை வயிரியர்க்காணின்ஈமென்றது நம்மை அவர்கள் காணவேண்டுவதில்லை; நம் மாளிகைமதிற்புறத்து நீயிர்காணினும் கொடுமி னென்றவாறு. ஈமென்றது அவ்வீகைத்துறைக்குக் கடவாரை. கக. அவ்வயினென்றது நின்னூரிடத்தென்றவாறு. (40) ஈமென (கக) அவ்வயின் ஆனக்கொள்கையையா தலினென மாறிக்கூட்டுக. (கக) ஆதலினென்பதனை (கஅ) மழையினும் பெரும்பயம்பொழிதி யென்பதனோடுகூட்டி, நின்னூரிடத்து அவ்வயின் ஆனாக்கொள்கையை யாய்ப் போந்தபடியாலே ஈண்டு நின்பாசறையிடத்து மழையினும் பெரும் பயம்பொழியாநின்றாயெனவுரைக்க. (கங) ஞாயிறுதோன்றியாங்கு மாற்றார் (கச) உறுமுரண்சிதைத்த வென முடிக்க. (கக) நெய்தல் (கஎ) இதழ்வனப்புற்றதோற்றமொடு (கஅ) பயம் பொழிதியெனக்கூட்டி, இவன்றன் நிறம் கருமையாக்கி அந்நிறத்தோற்றத் தானும் மழையோடுஉவமமாக்கியுரைக்க. ககூ பசியுடையொக்கலை அப்பசியைஒருவியவெனப் பசிவருவிக்க. உலகத்து (உ) வேந்தர்பலருளர்; அவராற் பெறுபயன் என் ? (எ) தகைப்பிற் (அ) பு றஞ்சிறை வயிரியர்க்காணின் (க) ஈமென (கக) அவ்வயின் ஆனாக்கொள்கையையாதலின், (கஅ) மழையினும் பெரும்பயம்பொழிதி ; அதனால் (கரு) அண்ணல், (உo) தோன்றல், (கக பசியுடையொக்கலொரீஇய